Header Ads



பள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி


ஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் நின்ற அங்கவீனர்கள், ஏழ்மையான வயோதிபர்கள், மாதர்கள் ஆகியோருக்கு உணவுப் பொதிகளை வழங்கினர். 

சிலருக்கு பணமும் வழங்கினர். 

பார்த்துக் கொண்டிருந்து விட்டு அருகில் சென்று அவர்கள் யார் என விசாரித்து விட்டு மீண்டும் மீண்டும் பாராட்டினேன். 

நன்றி தெரிவித்தேன். 

உணர்வுபூர்வமான விடயம் என்றேன். 

அவர்களது முகங்கள் மலர்ந்தன. 

தாயார் நான்கு வருடங்களுக்கு முன்னர், மரணித்து விட்டார் என்றனர். 

கிளிநொச்சி இராணுவத்தில் சேவையாற்றுகிறேன் என்றார். 

அவர்கள் புத்தளம் தப்போவ எனும் இடத்தை சேர்ந்த சிங்கள தம்பதியினர்.

அல்லாஹ்வின் பாதுகாப்போடு செல்லுங்கள் என்று வழியனுப்பி வைத்தேன் 

"படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம்" الخلق عيال الله

Mohamed Muhsi

2 comments:

  1. கடவுள் எல்லாம் வல்ல அல்லாஹாவின் விருப்பம் பல வழிகளில் நிகழ்கிறது. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பாலம் கட்டுவதற்கான நல்ல அறிகுறிகள் இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. இதே போன்று ஏன் எங்களுக்கு பௌத்த விகாரைகளுக்கும் கோயில்களுக்கும் சென்று அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ முடியாது. அத்தகைய மக்களுக்கு உதவி செய்யும் கலாசாரம் குறிப்பாக முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. அத்தகைய உயரிய கலாசாரத்தை அல்லாஹ்வுக்காகப் பேணி வருவோம். மின்சார பில்லைக் கட்டிக் கொள்ள முடியாது, பாவித்த நீருக்கான கட்டணங்களைச் செலுத்த முடியாத பொதுமக்கள் பலரை நாம் வங்கிகளுக்கு அண்மையில் பார்க்கலாம்.அந்த மனிதர்களின் பத்திரங்களை நாம் வாங்கிக் கொண்டு பணம் செலுத்தலாமே. அத்தகைய காரியங்களுக்கு அல்லாஹ்தஆலாவிடம் நிச்சியம் உயரிய கூலிகள் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.