ப்ரியாவின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்த இஸ்லாமியர் ..!
ஏமனில் தூக்கு தண்டனை பெற இருந்த இந்துப்பெண்மணி ப்ரியாவின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்த இஸ்லாமியர் ..!
இப்படி ஒரு தலைப்பை எவனும் எந்த ஊடகமும் வைக்க மாட்டான்
காரணம் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு .. இந்திய அரசாங்கத்தால் முடியாத ஒன்றை, உயிரை காப்பாற்ற முடியாத நிலையில், ஒரு இஸ்லாமியர் தலையிட்டு இஸ்லாமிய சட்ட நுணுக்கங்கள் மூலம் இதற்கு தீர்வு கண்டுள்ளார் (தற்போதைக்கு)
இதுவே ... ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்த செய்தியாக இருந்தால், தலைப்பில் இஸ்லாமிய என்ற அடைமொழி இல்லாமல் செய்தி வெளிவராது ...
காரணம் இஸ்லாமிர்கள் என்றாலே தீயவர்கள் பயங்கரவாதிகள் கெட்டவர்கள் என்ற மாய தோற்றத்தை என்றென்றைக்கும் மக்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற இந்திய அரசின் உத்தரவை ஊடகங்கள் நிறைவேற்றியே தீரவேண்டும்
-Abdul Wahab-

Post a Comment