35 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற, இலங்கை பயணி
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.
அவர் 195 தங்க பிஸ்கட்கள் மற்றும் 13 கிலோகிராம் தங்க நகைகளை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இதன் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment