Header Ads



ஒரு ஆண் மகனாக இருந்தால், கருணா என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் - செல்வம்

வடக்கு- கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள்   சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப் படுத்துகின்ற  அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(3) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை  தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும். 

வடக்கு கிழக்கிலே மொட்டு சின்னத்திற்கு ஆதரவாக களம் இறக்கப் பட்டிருக்கிற சுயேட்சைக் குழுவில் இருக்கிற தமிழர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.

சிங்கள தேசத்தின் தலைவராக பேசிக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழர்களாகிய நீங்கள் வாக்கெடுத்து கொடுக்கப் போகிறீர்களா? என்பதே எனது கேள்வி.

 மிகவும் ஒரு இனத் துவேசத்தை பேசிக் கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே தமிழர்களும் சேர்ந்து அதில் போட்டியிடுகின்ற அத்தனை பேரும் சேர்ந்து  சிங்கள தேசத்துக்கு எங்களுடைய தமிழர்களின் வாக்குகளை  பெற்றுக் கொடுக்க எப்படி உங்களுக்கு மனசாட்சி வேலை செய்கிறது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கில் குறிப்பாக களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் அவர்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பை தான் என்ன செய்தது? அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பை பலவீனப் படுத்துகின்ற  அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்து உள்ளது.

 நான் அவரிர்களிடம் கேட்கின்றேன் உங்களிடம் என்ன கொள்கை இருக்கின்றது.

உங்களுடைய கொள்கை என்ன?   நீங்கள் மக்களுக்கு என்ன சேவையாற்ற போகிறீர்கள் என்பதை மட்டுமே   நீங்கள் சொல்லுங்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைபை சொல்லி தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக ஏனையவர் சிங்கள தேசத்தில் இருந்து வந்து செய்பவர் போன்று நீங்கள் செய்வது ஒரு விதத்தில்   தமிழர்களுடைய வாக்குகளைக் குறைப்பதற்கான அல்லது பிரிப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகின்றீர்கள்.

 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக அதனுடைய நடவடிக்கை சரியில்லை என்று சொன்னவர்கள் நீங்கள் உங்களுடைய கொள்கை என்ன?  உங்களுடைய செயல்பாடு என்ன? மக்களுக்கு என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லி மக்களிடம் வாக்கு கேளுங்கள்.கூட்டமைப்பை அடித்து கேட்க வேண்டாம்.

-கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.   அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும்,மாதுபான சாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மன் மிக மோசமாக கருத்துக்களை கூறி வருகின்றார்.

உண்மையிலேயே அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.

அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.

போலி முகநூலில் பதிவிடுகின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒரு பொறுப்பான நிலையில் இருக்கின்றதாக கூறிக்கொள்ளுகின்ற  கருணா இப்படியான கருத்துக்களை சொல்லக்கூடாது.

 ஆகவே மீண்டும் சொல்லுகிறேன் அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் என்னுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அவர் அதனை நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் என்னுடைய நாடாளுமன்ற போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

No comments

Powered by Blogger.