Header Ads



மக்கள் கடனாளிகளாக மாறி, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் - நாமல்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்துவருவதாக நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருட அழிவுக்கு பின்னர் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் ன மக்கள் கருதுகின்றனர் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மைத்திரிபால சிறிசேனவிடம் ஆட்சியை ஒப்படைத்தபின்னர் பலவீனமான பொருளாதார நாடாக மாறியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ்மட்டத்தில் இருந்தவேளையே கோத்தாபய ராஜபக்ச அதன் பொருளாதாரத்தை பொறுப்பேற்றார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் தோல்விகளால் மக்கள் கடனாளிகளாக மாறியுள்ளனர் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எட்டுமாதங்களாக ஆட்சி செய்கின்றார் ஆனால் தனது ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதியை அவர் கொரோனாவைரசுக்கு எதிராக செலவிட்டுள்ளார் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்யை அரசாங்கத்திடம் நாட்டின் வளங்களை விற்பதை தவிர வேறு யதார்த்தபூர்வமான திட்டங்கள் இருக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னைய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையைத்தையும் வெளிநாடுகளுக்குவிற்றது, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் அவர்கள் காலி துறைமுகத்தையும் விற்றிருப்பார்கள் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. thugs namal
    what happened your launched satalite to moon?2014?
    you had been enojyed your lunch from maldives, 2014
    sperate halicopter
    car racing , lot of illegal matters had been done, thajudeen muder case , lot of womens raped
    for your luxary life srilankan had been paid like tax dont vot thes party

    ReplyDelete

Powered by Blogger.