Header Ads



இரண்டாம் புவனேகபாகு மன்னனின், அரச மண்டபம் தகர்ப்பு - மங்கள கண்டனம்

காட்டுமிராண்டிகள் எவரும் கதவுகளுக்கு வெளியில் இல்லை. மாறாக அவர்கள் அதிகார இருக்கைகளிலேயே அமர்ந்திருக்கிறார்கள்’ என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய குருணாகல் இராசதானிக்குச் சொந்தமான இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை எழுந்தநிலையில், அதுபற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வெள்ளிக்கிழமை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்திருப்பதாக இணைய ஊடக மொன்றில் வெளியாகியிருக்கும் செய்தியை மேற்கோள்காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

’13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய மிகமுக்கிய தொல்பொருள் சான்றாக விளங்கிவந்த மண்டபம் உடைக்கப்பட்ட விவகாரத்தில் குருணாகல் பிரதேச மேயர் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் ‘காட்டுமிராண்டிகள் எவரும் கதவுகளுக்கு வெளி யில் இல்லை. மாறாக அவர்கள் அதிகார இருக்கை களிலேயே அமர்ந்திருக்கிறார்கள்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.