Header Ads

கல்முனையில் அதிகளவு நெத்தலி மீன்கள் பிடிப்பு

- பாறுக் ஷிஹான் -

அம்பாறை மாவட்டம் கல்முனை  கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கும் மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டன.

இன்று (11) உட்பட குறித்த  கடற்கரையில் அதிகளவான நெத்தலி மீன்கள் அண்மைய நாட்களாக  பிடிக்கப்பட்டு வருகின்றன.

 தற்போதைய காலம் அதிகளவான மீன்கள் பிடிபடக்கூடிய காலமாக இல்லாதபோதும் நெத்தலி மீன்கள் அதிகமாக பிடிபட்டுள்ளதால் மீன்களின் விலையும் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.மேலும் கடற்கரையிலேயே கருவாடும் உற்பத்தி செய்யப்படுவதுடன் கல்முனை பகுதியில்  இருந்து கொழும்புக்கும் மீன்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
குறித்த  கடற்கரையில் அதிகளவான நெத்தலி மீன்கள் அண்மைய நாட்களாக  பிடிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய காலம் அதிகளவான மீன்கள் பிடிபடக்கூடிய காலமாக இல்லாதபோதும் நெத்தலி மீன்கள் அதிகமாக பிடிபட்டுள்ளதால் மீன்களின் விலையும் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.மேலும் கடற்கரையிலேயே கருவாடும் உற்பத்தி செய்யப்படுவதுடன் கல்முனை பகுதியில்  இருந்து கொழும்புக்கும் மீன்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அத்துடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று இவ்வாறான  அதிகளவான மீன்கள் பிடிபட்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.சுமார் 4 ,5 மாதங்களுக்குப் பின்னர் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டதாக அவர்கள் கூறினர்.

கடந்த சில மாதங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேங்களில் மீன்களின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.