Header Ads



ரிசாத்திற்கு எதிராக தற்போது, விசாரணை மேற்கொள்ள வேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரிசாத்பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகளை தற்போதைக்கு முன்னெடுக்கவேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடுவதால் இந்த வேண்டுகோளை தேர்தல் ஆணைக்குழுவிடுத்துள்ளது.

பொதுத்தேர்தல் வேளையில் இருவர் குறித்தும்விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதன் நோக்கம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்வேளையில் பல நீண்டகால வழக்குகள் கைவிடப்படுவதை பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள ரட்ணஜீவன் ஹூல் டிரான் அலஸ் தொடர்பான வழக்கின் சாட்சியொருவர் வழக்கிலிருந்து விலகினார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வாசிம் தாஜூதீனை கொலை செய்த வேறு இருவர் உயிருடன் உள்ளவேளை அவரது கொலை தொடர்பில் முக்கிய சந்தேநபர் இறந்துவிட்டார் என தெரிவித்து வழக்கை மூடும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளில் இந்த விசாரணைகள் தலையீடு செய்வதை கருத்தில் கொண்டு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையகம் கேட்டுவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்குள்ளது என வாதிடலாம் ஆனால் பல மாதங்களாக பல வருடங்களாக காணப்பட்ட வழக்குகள் தேர்தல் வேளைகளில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன என்றால் அதற்கு அரசியல்நோக்கங்களே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள அமைச்சர் ரிசாத் பதியுதீனை விசாரிப்பதற்கான ஆர்வம் ஏன் தீடிரென உருவாகியது எனவும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்கேள்வி எழுப்பியுள்ளார்

தேர்தல் வாக்களிப்புக்கு இன்னமும் இரண்டுவாரங்கள் உள்ள நிலையில் 15 மாதத்துக்கு பின்னர் ஏன் இந்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

15 மாதங்கள் காத்திருந்த பொலிஸாரினால் ஏன் இரண்டு வாரங்கள் காத்திருப்பதற்கு ஏன் முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடுமையான கடிதமொன்றை அனுப்பியதுடன் விசாரணைகளை பிற்போடுமாறு கேட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஊழல்கள் குறித்த விசாரணைக்காக ரவிகருணாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் ரட்ணஜீவன் ஹூல்தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் கடுமையான தலையீடு உருவாகிவருவதால் 17ம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினோம் என தெரிவித்துள்ள அவர் பசில் ராஜபக்ச உட்பட முக்கிய தலைவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் நாங்கள் மீண்டும் பொலிஸாருக்கு கடிதமொன்றை எழுதினோம் ஆனால் விசாரணைகள் இடம்பெறுகின்றன இரு முன்னாள் அமைச்சர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.