July 08, 2020

இந்தமுறை தகுந்த பாடம் கற்பிக்க, முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறது - மர்ஜான் பளீல்

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தூரநோக்குடன் நடந்து கொள்வார் என்ற நம்பிக்ைக எமக்கிருப்பதாக பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார். 

பேருவளை முஸ்லிம் பகுதிகளில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மர்ஜான் பளீல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்து உரையாற்றிய அவர், 

நடைபெறவுள்ள தேர்தல் ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த சமூகமும் ஐ.தே.கவுக்கு ஆதரவளித்து இன்றைய ஜனாதிபதியை தோற்கடிக்க முயற்சித்ததாக ஒரு குற்றச்சாட்டு பேரினவாத சமூகத்துக்கு மத்தியில் இருக்கின்றதை எம்மால் மறக்க முடியாது. அந்த நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். இந்நிலையை உருவாக்கிய முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இன்று சஜித் பிரேமதாச தலைமையிலான இனவாதிகள் நிறைந்த தொலைபேசி சின்னத்துடன் கைகோர்த்துள்ளதை காணுகின்றபோது வெற்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. 

அன்றைய நல்லாட்சியில் எமது முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைக் கூட நிறுத்த முடியாமல் திராணியற்றிருந்த இவர்களை இனியும் நம்பி நாம் வாக்களிப்பதா? சமூகத்தை இனவாதிகளுக்கு தாரைவார்த்து விட்டு அவர்கள் குளிர்காய நினைக்கும் செயற்பாடுகளுக்கு இந்தமுறை தகுந்த பாடம் கற்பிக்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறார்கள். இனியும் சமூகத்தை ஏமாற்ற முடியாது. 

மது சமூகத்திற்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைவிலிருக்கின்றன. அதேபோல் எமது பாடசாலைகள் உட்பட இன்னோரன்ன தேவைகள் இன்னும் நிவர்த்திக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் மீண்டும் மற்றவர்களின் பேச்சைக்கேட்டு ஏமாறி சேவைசெய்ய முடியாத எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால் எமது தேவைகளை நிறைவேற்றிக்ெகாள்ள முடியுமா? அதன்பின் தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்தை எமக்கு அணுக முடியுமா என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். 
இதுவரை காலமும் ஏமாறிய நாம், தற்போது கிடைத்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்து நன்றியுள்ள சமூகமாக எம்மை அடையாளப்படுத்திக்ெகாண்டால் மாத்திரமே எமது தேவைகளை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்திக்க முடியும் எனவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

எஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை "தி முஸ்லீம் குரல்" முழுமையாக ஆதரிக்கிறது. "முல்சிம் குரல்" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக மர்ஜன் ஹஜியரைப் பற்றி முன்வைத்து வருவதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.
அவர் தனது மறைந்த தந்தையின் அரசியல் பார்வை மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றுவார். களுத்துறை மாவட்டம் / பெருவெலா / அலுத்காமாவில் உள்ள முஸ்லீம் வாக்கு வங்கி மர்ஜன் ஹாஜியரின் தாழ்மையான மற்றும் யதார்த்தமான கோரிக்கையை ஆதரிக்க "ஒருமனதாக" முடிவு செய்து, வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில், இன்ஷா அல்லாஹ், எஸ்.எல்.பி.பி / "இலங்கை நிதாஸ் பொடுஜனா சந்தனயா" க்கு வாக்களிக்க வேண்டும்.
சமூகத்தைச் சேர்ந்த/எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முஸ்லீம்
இளம் மற்றும் புதிய அரசியல் ஆர்வலர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சிறுபான்மையினரின் சமூகங்களில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முன்வர வேண்டும். அவர்களால்
நேர்மையாக முஸ்லிம் வாக்குகளை ஒன்றிணைக்கவும் முடியும் என்பது கோட்டபய ராஜபக்ஷாவின் அரசியல் பார்வை. "புதிய முஸ்லீம் அரசியல் கலாச்சாரத்தை" உருவாக்கவும் அவர்களை சேகரிக்கவும் நேர்மையான ஒரு அரசியல் சக்தியை உருவாக்கும் முடியும். மற்றும் "சுத்தமான" விடாமுயற்சியுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளை உருவாக்கும் ஒரு புதியத
கலாச்சாரம் ஒன்றை முஸ்லீம் வாக்கு வங்கி "இப்போது" செயல்பட முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு 2019 -இல் வாக்களித்த 300,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாராளுமன்றங்களுக்கான எம்.பி.யின் தேசிய பட்டியல் நியமனங்களில் களுத்துறை முஸ்லிம்கள் மற்றும் வாக்காளர்களின் வாக்குகளாளும்
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதபய ராலபக்ஷ ஆகியோரின் உதவியால் மர்ஜன் ஹஜியார் அந்த வாய்ப்பைப் பெற முடியும். அது நடக்கும்படி முஸ்லிம்களான நாம் துவாவைக் கேட்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஏற்கனவே "பொட்டுவா" க்கு வாக்களித்த 300,000 முஸ்லீம்கள், இந்த முறை கிட்டத்தட்ட 650,00 முஸ்லீம்கள் SLPP க்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்,இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

மர்ஜான் அவர்களே! சமூகத்தை ஏமாற்றிப் பலிக்கடாவாக்கும் அநியாயத்தை மட்டும் செய்ய வேண்டாம்.

Post a comment