Header Ads



கிழக்கில் தமிழன் ஒருவரை முதலமைச்சராக்குவதே, எமது அரசியல் புரட்சி - கருணா

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

எதிர் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே அரசியல் புரட்சியாக உள்ளது இதனால் இம் முறை இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (12)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் எங்களுடன் அணிதிரண்டுள்ளார்கள் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க மக்கள் எம்மோடு இணைந்துள்ளார்கள் இதனால் திறம்பட பாராளுமன்ற அதிகாரத்தின் பின் எதிர்கால அரசியலை முன்னெடுப்போம்.

கோத்தபாய ,மஹிந்த அரசாங்கம் இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும் இதனால் தனித்துவமாக களமிறங்கி தேர்தலின் பின் உறுதியான பேச்சுவார்த்தையின் பின் அரசுடன் கைகோர்ப்போம் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நில அபகரிப்பு,தொல் பொருள் என்ற போர்வையில் வணக்கஸ்தளங்கள் அபகரிப்பு என்பன காணப்படுகிறது

இதனை உடன் தீர்வு காண தமிழ் மக்கள் எம்மோடு இணைய வேண்டும் கடந்த கால ரணில் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எதையும் தமிழ் மக்களுக்காக செய்யவில்லை இதனை மக்கள் உணர வேண்டும்.

மாற்றத்துக்கான சக்தியாக இந்த தேர்தலை வெற்றி கொள்ள களமிறங்கியுள்ளோம் கிழக்கு மக்களின் இருப்பையும் பாரிய அபிவிருத்தியையும் காணக்கூடிய அரசாங்கமாக கோத்தாபாய உள்ளார் இதற்காக நாம் செயற்பட வேண்டும் 12800 போராளிகள் அன்றைய அரசில் எவ்வித வழக்குகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள் அது போன்று 150 அரசியல் கைதிகள் உள்ளார்கள் இவர்களை விடுவிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் உடன்படிக்கை செய்துள்ளோம் நாடாளுமன்ற தேர்தலின் பின் இதனை தொடர்ந்தும் அரசுடன் விடுதலை தொடர்பிலும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்போம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகளை வைத்து நாடகமாடுகிறது எந்த வித தீர்மானமும் இல்லை சம்மந்தன் ஐயா ரணில் அரசாங்கத்துக்கு கடந்த காலத்தில் வெறுமென ரணிலுக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றினார் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் இல்லை. முன்னால் போராளிகள் அரசியலில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது அவ்வாறிருந்தால் தான் ஜனநாயக ஆட்சியும் திறமையானதும் நேர்மையானதுமான நிருவாகம் உள்ளீர்க்கப்படும் திருகோணமலையில் ரூபன் போன்று மட்டக்களப்பு, வன்னியிலும் கட்டளை தளபதிகளை களமிறக்கியுள்ளோம்.

ஒரே இலட்சியத்துக்காக போராடியவர்கள் இவர்களே இவர்களை களமிறக்கி தேர்தலின் ஜனநாயக உரிமையாகின்றது.

வடகிழக்கை பொறுத்தமட்டில் நிறைய வேறுபாடுகள் உள்ளது வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழன் தான் கிழக்கில் மூவினங்கள் வாழ்கின்றது தமிழர்களின் இருப்பை காக்க வேண்டிய தேவை உள்ளது கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரஸ் 07 ஆசனங்டளும் பெற்ற நிலையில் சம்மந்தன் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கி கிழக்கை தாரை வார்த்தியுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அதில் உறுப்பினரும் இல்லை தேர்தல் அதிகாரத்தின் பின் அரசுடன் இணைவோம்  கோத்தாபாயவின் உடன்படிக்கை உள்ளது பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கைகளை செய்வோம் தனித்துவ வெற்றியின் பின் அழுத்தமாக செயற்படுவோம்  உலகளவில் எமது சின்னமான கப்பல் சின்னம் பிரபல்யம் அடைந்து வருகிறது இதனால் இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் திருகோணமலையில் களமிறக்கப்பட்டுள்ளார்கள் வீட்டுக்கு வாக்களித்து வாக்களித்து வீடு வாசல்களே அழிந்து போய் உள்ளது

சம்மந்தன் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் தள்ளாடும் வயதில் அதிகார த்தை பெற முயற்சிக்கிறார் நல்லதொரு தலைவராக இருந்தால் இளைஞர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு சாக்கு கட்டிலில் ஓய்வெடுத்திருக்க வேண்டும்.திருகோணமலை வரலாற்றுமிக்க  கோனேஸ்வரத்தை அங்கு சென்ற மதகுரு அதனை தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர் இதனை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியாது அராஜ அரசியலை விட்டு மக்கள் எம்மோடு இணைய வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.