Header Ads



கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக, மன்சூர் செயற்பட நீதிமன்றம் தடை

- சட்டத்தரணி எ.எல். ஆஸாத் -

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றிய M.T.A.நிஸாம் இன் பணியினை கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டு இருந்ததுடன், மாகாண கல்விப் பணிப்பாளராக M.K.M.மன்சூர் ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருந்தார். 

பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக M.L.A.M. ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டார். 

மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் செய்யப்பட்ட இந்நியமணத்தை எதிர்த்து திருகோணமலை மாகாண மேல் நீதிமன்றத்தில் மன்சூரினால் தொடரப்பட்ட வழக்கினை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், நிஸாம் அவர்களை மாகாண கல்வி பணிப்பாளராக செயற்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அத்துடன் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கும் வரை குறிப்பிட்ட தடை உத்தரவானது அமுலில் காணப்பட்டிருந்தது. 

குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பானது 01.06.2020 அன்று திருகோணமலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனினால் வழங்கப்பட்டிருந்ததுடன்; குறித்த தீர்ப்பில் மன்சூர் அவர்கள் தொடர்ந்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக செயற்பட அனுமதி அளித்திருந்தது. 

மாகாண மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மீளாய்வு மனுவானது நீதியரசர்களான ஸிறான் குணதிலக மற்றும் ருவான் பெர்ணான்டோ முன்னிலையில் நேற்று (14) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது திருகோணமலை மாகாண மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி M.U.M.அலி சப்ரி ஆஜராகியிருந்தார். 

திருகோணமலை மாகாண மேல் நீதிமன்றில் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் சட்டத்தரணி கலாநிதி U.L.அலி சக்கி தோன்றியிருந்ததுடன் திருகோணமலை மாகாண மேல் நீதிமன்ற தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவும் சட்டத்தரணி அலி சக்கி தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இணையத்தள நடத்துனர்களுக்கு, தயவுசெய்து கடைசி இரண்டு பந்தியையும் வாசியுங்கள். குறைந்த பட்சம் எம்.யூ.எம் அலிசப்ரி என்ற பெயர் கடைசிப் பந்தியில் எவ்வளவு மோசமாக திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது. அடுத்தது பாரதூரமான ஒன்றுக்கொன்று முரணான செய்திகளையும் இந்த இரண்டு பந்திகளிலும் காணப்படுகின்றன. தயவுசெய்து இது போன்ற பாரதூரமான பிழைகள் இனிமேலும் ஏற்படாது பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. "மனிதன் ஒருவன்தான் உயர் பதவிகளில் இருக்க வேண்டும்" என்ற தத்துவத்தை உண்மையில் நிரூபித்துக் காட்டியவர் ஜனாப். ஆவுஆ. நிஸாம் அவரகளாகும். தன்னிடம் வருபவரகளை இன்முகததோடு வரவேற்று அவரகளது தேவைகளை எவ்வித களைப்பும் இன்றி முடித்துக் கொடுத்த அதிகாரி. தனது கட்டுப்பாட்டில் இல்லாத அலுவலகளை எப்படி முடிக்கலாம் என்ற பாடத்தையே முறையாகச் சொல்லி அனுப்பும் பெருந்தகை. பெண் ஆசிரியர்களிடம் மட்டும் அல்ல தனது சகல ஆசிரியர்கள் சக அலுவலர்கள் ஆகியோரிடம் தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தியவர். அரசியல்வாதிகளின் நியாயமற்ற கோரிக்கைகள் எதனையுமட் கணக்கிலெடுக்காதவர். அலுவலக நீதி முறைமையை ஒழுங்குற செய்து காட்டியவர். நீதி தோற்கடிக்கப்பட்டதைப்போன்ற ஒரு மாயை இருந்தாலும் அது ஒருபோதும் தோற்பதில்ல என்பதனை நிஸாம் சேர் அவரகளிடம் இருந்து பெற்ற படிப்பினை. உண்மையில் நீதியை யாரும் கொன்றுவிடக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.