July 18, 2020

எனது பேச்சை துப்பாக்கிச் குண்டால், மாத்திரமே நிறுத்த முடியும் - ஹரீன்


(செ.தேன்மொழி)

ராஜபக்ஷாக்களின் முகத்தில் காணப்படும் எண்ணங்கள் இதயத்தில் இல்லை என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார செயற்பாட்டாளர் ஹரின் பெர்ணான்டோ, தங்களது குடும்ப அதிகார பலத்தை பாதுகாப்பதற்காக எதனையும் செய்வார்கள் என்றும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுக்கு முஸ்லீம் நபர்களை ஈடுபடுத்தியிருந்தாலும் அது ஆளுதரப்பினரின் திட்டம் என்றும், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரமதாசவை தோல்வியடையச் செய்வதற்காகவே இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நாம் அனைவரும் முகங்களை மூடிக் கொண்டுள்ளோம். நாளைய தினம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. கொழும்பு மூடப்படுமா , என்ற அச்சம் ஏற்பட்டுள்ளத.  முச்சக்கர வண்டிகள் ஓடுமா என்றுன் கூட தெரியவில்லை. ஆளும் தரப்பினருக்கு தேர்தல் பித்தது பிடித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஏன் இம்முறை கொழும்பில் போட்டியிடுகின்றார் என்று உங்களுக்கு தெரியுமா? மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவினால் முன்னெடுக்க முடியாமல் போன வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே பிரேமதாச 31 வருடங்களுக்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார். இதுவரை காலமும் அவர் அம்பாந்தோட்டையிலே போட்டியிட்டிருந்தார். பிரமதாசவின் காலத்தில் அமைக்கப்பட்ட கெத்தாராம விளையாட்டு அரங்கினாலேயே இப்பகுதி பெரிதும் பிரசித்தமானது. ஆனால் ராஜபக்ஷாக்கள் இவ்வாறு எதனையும் செய்யமாட்டார்கள். மாறாக இருக்கும் கட்டிடங்களையும் இடித்து சீனர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

ஏப்பரல் 21 தாக்குதலுக்கு பின்னால் அரசியல் திட்டமொன்று இருந்தது. அதாவது முஸ்லீம் மக்கள் மீது ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதும் , கத்தோலிக்க மக்களை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிப்பதுமே. பயங்கரவாதி சஹ்ரான் என்ற நபரை அனைத்து முஸ்லீம் மக்களுக்கும் சமமாக்க முற்பட்டனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹூமான் போன்றோரே இதற்கு எதிராக முன்னின்று செயற்பட்டு தடுத்தார்கள். இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் ,  அது தற்போதைய ஆளும் தரப்பினரது திட்டமாகும்.

எனது பேச்சை துப்பாக்கிச் சூட்டால் மாத்திரமே நிறுத்த முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஹெலிக்கப்படர் மூலம் அலரிமாளிகைக்கு அழைத்து வந்தார். இதன்போது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸாரின் அறிக்கையை காண்பித்து அதில் முதலாவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவதாக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நான் அந்த அறிக்கையை விளையாட்டுதுறை இமைச்சில் இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பில் காண்பித்து , விரைவில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளப்படுத்துவேன் என்று தெரிவித்தேன். உடனே எனக்கு எதிராக விமர்சனங்கள் பரப்ப்பட்டன. ஊடகங்கள் முன்னாலே என்னை வரவிடாமல் செய்தார்கள். இந்த அனைத்து திட்டமும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்தே இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் படி சஜித் பிரமதாச 42 சதவீத வாக்குகளையும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ 52 சதவீத வாக்குகளையும் பெற்று கொண்டிருந்தனர்.

கொதாபயவுக்கு கிடைத்த வாக்குகளில் 5 வீதம் சஜித்துக்கு கிடைத்திருந்தால் இருவரும் 47 வீதத்தை பெற்றுக் கொண்டிருப்பார்கள். பின்னர் இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கிடப்பட்டிருக்கும் . அது மக்கள் விடுதலை முன்னணியினரது . அப்படியென்றால் சஜித்தான் வெற்றிப் பெற்றிருப்பார். எமக்கு வாக்களித்தால் முஸ்லீம் மக்களை பாதுகாப்பதாகவும் , கத்தோலிக்க மக்களுக்கு நல்லாட்டி அரசாங்கம் தீங்கு செய்துள்ளதாகவும் காண்பித்தே ஆளும் தரப்பினர் இந்த வாக்குகளை வெற்றிக்கொண்டனர்.

ராஜபக்ஷாக்களில் முகத்தில் இருப்பது ஒன்று , இதயத்தில் இருப்பது இன்னுமொன்று. இம்முறை தேர்தலில் ஆறு பேர் அவர்களது குடும்பத்தில் களமிறங்கியுள்ளனர். குடும்ப ஆட்சியே இவர்களுக்கு முக்கியம். இவர்களை வீழ்த்தவே கடந்தகாலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் ரணில் - மைத்ரி குழப்பத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

0 கருத்துரைகள்:

Post a comment