Header Ads



இரத்தினபுரியில் போட்டியிடும் ஐ.தே.க அணி மிகவும் பலம்வாய்ந்தது, இதுவொரு வெற்றிபெறக் கூடிய அணி


விளையாட்டு ஆட்டநிர்ணய சட்டமூலத்தின் பிரகாரம் மஹிந்தானந்தவின் கருத்துகள் மிகவும் பாரதூரமானவையாகும். அவர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

பலாங்கொடையில் இன்று -04- நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.தே.க அணி மிகவும் பலம்வாய்ந்த அணியாகும். இதுவொரு வெற்றிபெறக் கூடிய அணி. மக்கள் மத்தியில் ஐ.தே.க அணி வெற்றியை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே ஆட்டநிர்ணய சதி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துகள் விளையாட்டு ஆட்டநிர்ணய சட்டமூலத்தின் பிரகாரம் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் பாரதூரமானது. இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், கருணா அம்மான் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் செய்கிறார். கிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் அவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சட்டத்திமுன் யாவரும் சமமாகும். கருணா அம்மான் 3000 இராணுவ வீரர்களை கொலை செய்துள்ளமையால் அவர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

- Malainaadu -

No comments

Powered by Blogger.