Header Ads



உறுப்புரிமை நீக்கப்பட்ட பலர் ரணிலுடன் பேச்சு

(எம்.மனோசித்ரா)

சஜித் அணியில் செயற்பட்ட நிலையில் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட பலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். தேர்தலின் பின்னர் மீண்டும் கட்சியுடன் இணைந்து நேர்மையாக செயற்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தாமதப்படுத்தியுள்ளது.

கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர்.

அதற்கமைய கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ள 54 வேட்பாளர்களின் பெயர்களை சில தினங்களுக்கு வெளியிடாமல் இருக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 102 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 54 பேருடைய உறுப்புரிமையை நீக்குவதற்கு செவ்வாய்கிழமை தீர்மானிக்கப்பட்டது.

கட்சி தலைமைத்துவத்தின் ஆலோசனைக்கமைய ஏனைய உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதை ஒத்தி வைப்பதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்சி உறுப்புரிமையை நீக்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் கட்சி தலைவருடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக உறுதியளித்துள்ளதோடு இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை பொதுத் தேர்தலின் பின்னர் எடுப்பதற்கு கட்சி தலைமைத்துவம் தீர்மானித்துள்ளது. 

No comments

Powered by Blogger.