Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவிடம் நான் சிறிய உதவியை கோருகிறேன்


மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி இருக்கும் இலங்கை தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அரசாங்கம் குறைவான கவனத்தையே செலுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிடம் நான் சிறிய உதவியை கோருகிறேன். இந்த உதவியை நான் எனக்காக கோரவில்லை.

துபாய் நாட்டில் 102,363 பேர் பேரும், கட்டாரில் 150,000 பேரும், குவைத்தில் 97 ஆயிரம் பேரும், சவுதியில் 400,000 பேரும் இருக்கின்றனர். இந்த அனைத்து நாடுகளிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலைவனத்தில் கஷ்டப்படும் இந்த மக்கள் தமது தொழில்களை இழந்துள்ளனர் தொழில் வாய்ப்பை இழந்து அவர்கள் இலங்கை திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.

துபாயில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வர இதுவரை நான்கு விமானங்கள் மாத்திரமே சென்றுள்ளன. சவுதியிலேயே அதிகமானோர் வேலை செய்கின்றனர். அங்கு ஒரு விமானம் மாத்திரமே சென்றுள்ளது. கட்டார் மற்றும் குவைத் நாடுகளுக்கு தலா இரண்டு விமானங்கள் சென்றுள்ளன.

ஒரு விமானத்தில் 300 பேரை மட்டுமே அழைத்து வர முடியும். ஓமான் நாட்டுக்கு விமானங்கள் எதுவும் செல்லவில்லை. மத்திய கிழக்கு என்றால் எத்தனை நாடுகள் இருக்கின்றன. ஜோர்தான், பஹ்ரேன் இந்த நாடுகள் எவற்றுக்கும் விமானங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்தியாவுக்கு மாத்திரம் இதுவரை 2 ஆயிரம் தடவைகள் விமானங்களை அனுப்பியுள்ளனர்.

என்ன பேசுகின்றனர். இவர்கள் நாட்டு மக்கள். நாட்டை காக்கும் வீரராம். நாட்டுக்கு பணத்தை அனுப்பும் மக்களை கூட கவனத்தில் கொள்ளவில்லை. நாங்கள் 6 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டுக்கு வர விண்ணப்பித்துள்ள அனைவரையும் அழைத்து வருவோம் என நான் வாக்குறுதி வழங்குகிறேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.