July 30, 2020

அப்பா களமிறங்குவதை தடுத்த மகன், பின்னர் மனம் மாறியது எப்படி? புதிய தகவல்களை போட்டுடைத்த தனசிரி

(அஸ்ரப் ஏ சமத்)

 கே. உங்களது  கல்வி, குடும்பம் ,தொழில் பற்றி கூறுங்கள் ?

பதில் - எனது தந்தை 70 வருடங்களுக்கு முன் கோமகமவில் இருந்து  ஒரு பௌத்த மத குருவிடமிருந்து 1 ரூபா.75 சதத்துடன்     நுகேகொடைச் சந்திற்கு வந்துள்ளாா். அங்கு உள்ள ஒர் அரச மரத்தின் கீழ் ஒரு பத்திரிகை விரித்து துாங்கி  அவ்விடத்திலேயே பத்திரிகை வியாபாரம் செய்த  டொமினியன் வில்பட் என்ற ஒரு  நடைபாதை வியாபாரியின் மகன் தான் இந்த தனசிறி அமரதுங்க. நான் தெகிவளையில் பிறந்தேன். அதன் பின்னா் எனது தந்தை நுகேகொடையில் பல வியாபாரத்திற்குச் சொந்தக்காராகினாா். அப்பிரதேசத்தில்  உள்ள பல கட்டிடங்களை அவா்  வாங்கினாா். அதனை வாடகைக்கு  விட்டிருந்தாா்.நான். நுகேகொடை சென்.ஜோன்ஸ் கல்லுாாியில் 6ஆம் ஆண்டுவரை கற்று அதன் பின்னா் உயா்தரம் வரை கொழும்பு ரோயல் கல்லுாாியில் கற்றேன். அதன் பின்னா் என்னை எனது தந்தை அமேரிக்காவுக்கு உயா்கல்வி கற்பதற்காக  அனுப்பினாா். அங்கு 7 வருடங்கள்  வியாபார முகாமைத்துவம் கற்கைநெறி பயின்று பட்டம் பெற்று.    இலங்கை வந்தேன்.    இலங்கையில்   காணிகள், கட்டிடங்கள் தொடா்மாடி வீடுகள் வாங்கி விற்றல்  நிர்மாணித்தல் போன்ற  தொழிலையே நான் ஆரம்பித்தேன்.  தற்பொழுதும்  அந்தத் தொழிலையே செய்து வருகின்றேன்.  எனக்கு வயது 51   எனக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளாா்கள். , இருவரையும்  அமேரிக்காவுக்கு  அனுப்பி அங்கு  உயா் கல்வி கற்று  பட்டதாரிகளாக  உள்ளா்ா்கள். 

கே.  உங்களது அரசியல் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள் ?,

காலம் சென்ற  அமைச்சா் காமினி திசாநாயக்காவின் ஆசிர்வாதத்துடன்  நான் அரசியலில் காலடி வைத்தேன்.  அவரே எனக்கு உயா் கல்வி கற்பதற்கும் அமேரிக்கா செல்வதற்கும் உதவினாா்.  அத்துடன்    என்னை  ஜ.தே. கட்சியிலும்  இணைத்தாா். அவரது மகன்      நவீன் திசாநாயக்கவும்  எனது பாடசாலை நண்பா். நான்  தெகிவளையில முதன்  முதலில்  நகர சபை  உறுப்பிணராகி   மாநகர சபை மேயர் ஆனேன். அதன் பின்னா் மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த  காலத்தில்  அவா்  என்னை   பொதுஜன பெரமுனை கட்சியில் இணைத்துக் கொண்டாா். அவரின் அழைப்பின் பேரில் இன்றும் அவருடன்தான் ்இருக்கின்றேன்.    அக் கட்சியின் ஊடகவும்    தெகிவளை கல்கிசைக்கு மீண்டும் மேயராக வெற்றியீட்டினேன்.   இரண்டு முறை தெகிவளை -கல்கிசை மேயராக பதவி வகித்த  காலத்தில்  தெகிவளை கல்கிசை ரத்மலானை களுபோவிலை வாழ் பௌத்த ,தமிழ் , முஸ்லிம் ,கிரிஸ்த்துவ சகல இன மக்களுக்கும்  சமமான சேவையைச் செய்துள்ளேன். தெகிவளை கல்கிசை பகுதியில் எந்த பாதையும் காப்பட்டு இட்டு மரண சாலைகள் தொட்டு பாலா் பாடசாலை வரை எனது காலத்தில் திறம்பட அபிவிருத்தி செய்தேன் இதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்பு நகர அபிவிருத்தி செயலாளராக பதவி வகித்த கோட்டபாய அவா்கள் நிதிகளை வழங்கி எனக்க உதவி செய்தாா்கள்.  நான் நல்லதொரு  பௌத்தன். அத்தோடு ஏனைய மதங்களையும் அவா்களது மதம்  கலை. மொழி ,கலாச்சரத்தினையும்  நன்கு மதிப்பவன்.     இப்பிரதேசத்தில்  வாழ் மக்கள் சகலிரனதும்  மனதினையும்   வென்றுள்ளேன். அதனால் தான் இரு முறை மேயராகவும். கடந்த இரு முறை  பாராளுமன்றதோ்தலில் வேட்பளராக  இருந்துள்ளேன். . கடந்த முறை 6 பேர் மட்டுமே பொதுஜன பெரமுனையில்  பாராளுமன்றம் சென்றாா்கள். அதில் நான் 7வதாக இருந்தேன் 1200 விருப்பு வாக்கு குறைவினால் கடந்த முறை பாராளுமன்றம் செல்லும்   சா்ந்தா்ப்பம்  எனக்கு கிட்டவில்லை. இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைக் கட்சியின் ஊடாக  பாராளுமன்றம் செல்வதற்கு  வாய்ப்பு உள்ளது.  கடந்த  முறை 7 வது இடத்திற்கு வந்த எனக்கு  இம்முறை இந்த 11 பேர்க்குள்  நிச்சயமாக உள்வாங்கப்படுவேன்  என நம்பிக்கை உண்டு. கடந்த 30 வருடகாலமாக தெகிவளைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பிணா் ஒருவா் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது. இறுதியாக காலம் சென்ற சீ.வி குணரத்தின அவா்கள் தெகிவளை பாராளுமன்ற உறுப்பிணராகவும் அமைச்சராகவும் இருந்தாா்கள்.  ஜனாதிபதி இம்முறை கொழும்பு மாவட்டத்தில்  16  புதியவா்கள்    பழையவா்கள்  6 பேரையுமே கொழும்பு மாவட்டத்தில்  வேட்பளராக நிறுத்தியுள்ளாா். இமமுறை அநேகமாக புதியவா்களுக்கு பாராளுமன்றம் செல்வதற்கு  நிறைய சா்ந்தாப்பம் உள்ளது. அதனையே ஜனாதிபதியும் பிரதமரும்  விரும்புகின்றாா்கள்.

 கடந்த காலத்தில் நாட்டில் . இனக் கலவரங்கள் வேறு பிரதேசங்களில்  நடைபெற்ற போது கூட தெகிவளையில்  பிரதேசத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் இடம்பெறாது நான் பாதுகாத்தேன்.  எனது நண்பா்களும் பொலிஸாா் உதவியுடன்  களத்தில் இருந்தேன்.. .  அளுத்கமை சம்பவம் நடைபெற்றபோது வெளியில் இருந்து சிலா் பஸ்கள் மூலம்  தெகிவளையில் உள்ள முஸ்லிம்களது கடைகளையும் பள்ளிவாசல்களையும் தாக்குவதற்கு  வந்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தவுடன் . உடன் செயல்பட்டு   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்று  பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச  ஊடாக கதைத்து  உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை   எடுத்து  நான் 3 நாட்கள்  நண்பா்களுடன் 6 வேன்களில்  இரவு பகலாக  தெகிவளை உள்ள சகல பள்ளிவாசல்களிலும் காவல் செய்தேன்.   
 எனது                    காலத்தில்தான்   தெகிவளையில் உள்ள 6 கோவில்களுக்கும்  தேர்கள்  ஊர்வலம் செய்வதற்கும் சகல அனுமதியும் வழங்கி பாதுகாப்பும் நடவடிக்கை வழங்கி அதனை மீள ஆரம்பித்தேன்.  அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தொடா்ச்சியாக  நடைபெற்று வருகின்றது.   அதற்காக சில பௌத்தா்கள் என்னைக் கடிந்து கொண்டாா்கள்.     எனக்கு தமிழ் முஸ்லிம் பாடசாலை நண்பா்கள் உள்ளனா்.,  அரசியல் வியாபார நண்பா்கள் உள்ளனா். அவா்கள் தான் எனக்கு அரசியல் செலவுகளுக்கும் உதவுகின்றனா்.

நான் ஒருபோதும் அரசியலினால் சொத்துக்கள்  சம்பாதிக்கவில்லை, எனது தந்தை எனக்குத் தந்த காணி வீடுகள் கடைகள் சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தின் ஊடகவே எனது  பிள்ளைகள் கல்விச் செலவுகள் மற்றும் எனது வாழ்க்கையை கொண்டு செல்கின்றேன். எனது சொந்தச் செலவில் ஏழை எளிய மக்களுக்கும் உதவி வருகின்றேன். 
எனது தந்தை பெயரில் டொமினியன் என்ற நுகேகொடையில்  மதுபான விற்பனை நிலைய லைசனைனை இரத்துச் செய்தேன் .  எனது தந்தை மரணிக்கும்போது இந்த வியாபாரத்தினை என்னை  செய்யக் கூடாது என வேண்டியிருந்தாா்.அதற்கமையவே  இந்த நாட்டின்   வரலாற்றில்  அரசியல் வாதி ஒருவா் மதுபான விற்பனைப் அனுமதி பத்திரத்தை  இரத்து பன்னியிருப்பது நான் ஒருத்தராகத்தான் இருக்க முடியும் அப்போது  20 மில்லியன் ருபாவுக்கு வேறு ஒருவருக்கு கொடுங்கள் என அன்று இருந்த மதுவரி திணைக்கள  ஆனையாளா் கூட சொன்னாா். நான் வலுக்கட்டாயமாக அதனை இரத்துச்  செய்தேன்.. இந்த மதுபோதையால்    மனிதர்கள் அடிமையாகக் கூடாது. நுகேகொடையில்  டொமினின் என்ற மதுச் சாலை இருக்கக் கூடாது என என்னினேன். எனது தந்தை  தெகிவளையில்  நான் வசிக்கும் வீட்டுக்கருகில் உள்ள   காணியில்  ஒன்றறை ஏக்கரை விற்றேன். அதனை விற்றமைக்கு கார்ணம்    ரணில் விக்கிரமசிங்கவின்  ஜ.தே.கட்சியில் இருக்கும் காலத்தில் நான்  நாடு முழுவதும் போஸ்டா் ஒட்டியதுக்கும் வேறு தோ்தல் செலவினங்களுக்கும்  கடன்காரண் ஆனேன்.  அக் காணியை குறைந்த விலையில் விற்க நோ்ந்தது,

கே. இம்முறை கொழும்பில் தோ்தலில் வெற்றி பெற்ற பின் நீங்கள் கொழும்பு மாவட்ட மக்களுக்கு செய்ய உள்ள அபிவிருத்திகள் என்ன ?
கொழும்பு மாவட்டத்தில் நுாற்றுக்கும் அதிகமான தோட்டங்கள் உள்ளன. அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை. அந்தத் தோட்டத்தில் உள்ள ஒருவா் பாதாள கோஸ்டியாக  இருந்தால் அந்த தோட்ட வாழ் மக்களுகளுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு ஒழுங்கான சுகாதார வசதி ,மலசலகூட வசதிகள் இல்லை. கல்விகற்பதற்கு பாடசாலைகள் இல்லை. ஆனந்தாக் கல்லுாாி முன்றலிலும்  பின்னாலும் சேரி வீடுகள் கொண்ட   தோட்டங்கள் உள்ளன. அந்த மக்களுக்கு அங்கு பாடசாலை அனுமதி கிடைப்பதில்லை.  ஒரு குடும்பம் பலகையிலான 10 அடியிலான அரைக்குள் துாங்கும்போது பெற்றோா்கள் வீட்டு முற்றத்தில் 2 பிளாஸ்டிக்கதிரைகள் இருந்தவாறே  இரவு காலங்களில் துாங்குகின்றாா்கள்.  பொதுப் நீர்க்குழாயில் இருந்து  நீா் சேகரித்து  கலன்களில்  துாக்கிச் செல்கின்றாா்கள்.  அவா்களுக்கு நிரந்தர  தொழில் இல்லை.  வருமானம் இல்லை. பாதையோர வியாபாரம் நாளாந்த கூலி வேலை, புறக்கோட்டை சந்தைகளில் மூடைகளை துாக்கி நாளாந்தம் சம்பாதித்து அதனைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனா். 

இதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவா்கள் நகர அபிவிருத்தி பாதுகாப்புச் செயலாளராக இருந்து காலத்தில் கொழும்பில்  தொடா்மாடி வீடமைப்புத் திட்டங்களை  அறிமுகப்படுத்தினாா். அதனை தொடா்ந்து முன்னெடுத்து இம் மக்களை மீள குடியமா்த்தி அவா்களது வாழ்க்கைத் தரத்தினையும் உயா்த்துல் வேண்டும்.  தற்பொழுது அரசினால் வழங்கப்பட்ட  தொடா்மாடியில் குடியிருக்கின்ற மக்கள் மிகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனா் . இதே போன்று கொழும்பில் உள்ள சகல முடுக்கு வீடுகள் சட்டவிரோத வீடுகள் கடலோரங்கள் பஸ்நிலையங்கள் புகையிரத நிலையங்கள் , தோட்டங்களில் வாழும் மக்களுக்கு  தெ்ாடா்மாடி வீடுகள் அமைப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும்  ஜனாதிபதியுடன் இணைந்து நான்  செயல் ஆற்றுவேன். இம் மக்களுக்கென சுயதொழில் திட்டங்கள்  அமைத்தல் வேண்டும். கொழும்பில் உள்ள சகல பிரபல பாடசாலைகளில் ்இப்பிரதேசத்தில் வாழ் குடும்பங்களது   பிள்ளைகளுக்கும்  40 வீதமாவது பாடசாலை அனுமதிகள் வழங்கப்படல் வேண்டும். 

ஜனாதிபதி கோட்டபாய அவா்கள் ஜனாதிபதித் தோ்தல் வருவதற்கு  சம்மதத்தினை எடுப்பதற்கு மகிந்த ராஜபக்சவுக்கும் கோட்டபாயவுக்கும் இடையில் நீங்கள் முக்கிய   தரகராக  பங்கு ஆற்றியதாக  ஒரு கதை கூறுகின்றனா் இது பற்றிக் கூறுங்கள்  ?

பதில்  மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித்  தோ்தலில்  தோற்றதும் அவருடன்  இருந்தவா்கள்  எல்லோறும் கட்சி மாறி விட்டாா்கள். சிலா் மைத்திரிபால சிறிசேன உடனும்  வேறு சிலா் ரணிலுடன் போய் இணைந்து கொண்டாா்கள்.  நான் மட்டுமே மகிந்தவுடனேயே  இருந்தேன். அவருடன் வாகனத்தில்  இருவரும்   பயணிப்போம்.. இறுதியாக நடைபெற்ற   ஜனாதிபதித் தோ்தல் காலத்திற்கு முன்  ஒரு நாள்  எனது  கையடக்க தொலைபேசி  ஊடகா கோட்டாவுக்கு  அழைப்பை எடுத்து தரும்படி மகிந்த ராஜபகச  கூறினாா்  ”  இன்னும் ஏன் நீங்கள் அமேரிக்க பிரஜையை வாபஸ் பெரவில்லையா?   எனக் கேட்டு  கோட்டாவுடன்  கடிந்து கொண்டாா்.  அதன் பின்னா் அவரது மகன் மனோஜ் தான் கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு  தடையாக உள்ளாா் போல தெரிகிறது என்றாா்” . அப்படியா சோ் நான் அதனை பாாத்துக் கொள்கின்றேன் எனச் சொல்லி . உடன்  அடுத்த இரண்டு  நாற்களுக்குப் பிறகு  கொழும்பில் இருந்து லொஸ் ஏஜென்சிக்குச் சென்றேன். அங்கு எனது முஸ்லிம் நண்பா் உடன் சென்று மனோஜின் வீட்டுக்குச் சென்றேன் அவா் ஒரு துாரமான ஒரு பிராந்தியத்தில் வாழ்கின்றாா். . அவரது மனைவி மிகவும் நல்லவா் அவா் அரசியல் சமுக சேவைகளில் இலங்கையில் ஈடுபட்டவா்  இரவு உணவு உண்டுகொண்டிருக்கும்போது  தற்போதைய நாட்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னேன்.  உங்களது தந்தையை ஜனாதிபதி வேட்பளராக நியமிக்க  எல்லோறும் விரும்புவதாகவும்  சொன்னேன்.  அநதப் பேச்சை எடுத்ததும் மனோஜ் ் என்னுடன்  கடிந்து விழுந்தாா் . வேறு பேச்சு பேசுங்கள்  தந்தை அமேரிக்க பிரஜை இரத்துச் செய்தால் அங்குள்ள ஆட்சியாளா்கள் அவரை சிறையில் போட்டுவிடுவாா்கள். அவருக்கு அரசியல் சரிவராது என்றாா்.  இருந்தும் எனக்கு மிகவும் ஒத்தாசையக இருந்தாா்  . அவரது மனைவி  மகிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதம் சகலரினதும் எதிா்பாா்ப்பு பற்றி நிரையச்  சொன்னேன். அதன் பின்  அவா் சிறுகச் சிறுக எமது வழிக்கு வந்தாா். அதன் பின் மனோஜ்  மனம் ்மாறி தந்தையுடன் பேசினாா்.   தனது தந்தைக்கு நான் வந்தமை பற்றியும் அவரது அனுமதியை வழங்கியிருந்தாா். ஜனாதிபதிக்கு கோட்டபாய  நான் நாடு வந்ததும் கோட்டபாய அமேரிக்கா சென்று இருந்தீா்களோ என வினாவினாா்.  இந்த நாட்டில் அரசயலுக்குள் வரமால் கடசிக்கு  போஸ்டா் ஒட்டாமல் கொடி கட்டாமல் , அரசியல் இல்லாமல் வந்த ஒருவா்தான் இந்த கோட்டபாய ராஜபக்ச ஆவாா். அவரின் அடுத்த ஆட்சிக்கு சிறந்த பாராளுமன்ற உறுப்பிணா்கள் தேவை அவா்கள் ஒருபோதும் கட்சி பதவி பணத்திற்கு விலைபோகதாவா்களாக இருத்தல் வேண்டும்.  ஆகவே தான்  எனது இலக்கம் 2  கொழும்பில் சிறுபான்மையினா் இம்முறை பெருமளவில் ஆதரிப்பாா்கள் என நினைக்கின்றேன்  என்றாா் தனசிரி அமரதுங்க 

3 கருத்துரைகள்:

இவ்வளவு நெருக்கமான உங்களுக்கு, முஸ்லிம்களின் வாக்குகளை பெற இறுதிச் சந்தர்ப்பம். ஜனாஸாத் தீயை அணையுங்கள். இன்னும் உள்ளது சொற்ப நாட்களே!

Yes, there truths in his statement. we hope good moves in his future...

இந்த கதைத் தொடரினை வாசிக்கும் போது ஓர் உண்மை சூட்சகமாக மறைந்து இருப்பதை உணர்கிறேன். அதாவது முஸ்லிம்களின் வாக்குகளைப் பொஹட்டுவைக்குக் காவிப்பறிப்பதற்கான ஒரு cloud conspiracy அல்லது மறைமுகமான சூழ்ச்சியாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்களுக்கு அடிக்கடி பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ்வுத்தஆலா இட்ட கட்டளையை நாம் பார்க்க வேண்டும். அன்னார் அடிக்கடி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابا யாஅல்லாஹ்,சத்தியத்தை எனக்குச் சத்தியமாக காடடுவாயாக, அதனைப் பின்பற்றும் மனேநிலையையும், ஆற்றலையும் வழங்குவாயாக,தவறை,வழிகேட்டை வழிகேடாகவே தெரியப்படு்த்துவாயாக,அதனைத் தவிர்ந்து நடப்பதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக.' இந்தப்பிரார்த்தனையை நாம் அடிக்கடி அல்லாஹ்விடம் மனமுருகிப் பிராாத்திப்போம்.

Post a comment