Header Ads



அனுபவமிக்க வெளிப்படையாக பேசும் முஸ்லீம் தலைவர்களை ஓரம்கட்ட சதிமுயற்சி

ஊடகங்களை பயன்படுத்தி முஸ்லீம்களை இலக்குவைக்கும் சதிமுயற்சி குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலிற்கு முஸ்லீம் சமூகமே காரணம் என ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முயற்சிக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லீம்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர் ஊடகங்கள் முஸ்லீம் சமூகம் முழுவதையும் பயங்கரவாதிகளாக சித்தரித்தது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களின் அரசியல எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மீண்டும் ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு முஸ்லீம் சமூகத்தினரை நோக்கி விரல்களை நீட்டுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட ஜனாதிபதி விசாரணைக்குழு அதில் தொடர்புபட்டுள்ள முஸ்லீம்கள குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்வில்லை என தெரிவிக்கும் இலத்திரனியல் ஊடகங்கள் மீண்டும் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்துகின்றன எனவும்; ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவையே முஸ்லீம்கள எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் சவால்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவமிக்க வெளிப்படையாக பேசும் முஸ்லீம் தலைவர்களை ஓரம்கட்டுவதற்கான சதிமுயற்சிகளும் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
    (அல்குர்ஆன் : 4:107)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.