Header Ads



சவுதியில் இருந்து இலங்கைவந்த 9 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சௌதியில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர். 

அதன்படி, இதுவரை 1967 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, 892 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.