Header Ads



ஹஜ் யாத்திரிகர்களுக்கான 7 நாள் தனிமைப்படுத்தல் ஆரம்பம்

இந்த ஆண்டின் -2020- மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ் கடமைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஈடுபட்டு வருவதாக சவூதி ஹஜ் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பான ஹஜ் கடமைக்கான ஒரு நடைமுறையாகவே இது முன்னெடுக்கப்படுகிறது. தற்போது சவூதியில் வசித்து வரும் 160 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமூக இடைவெளி மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகள் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஹஜ் கடமையில் சுமார் 1,000 யாத்திரிகர்கள் வரையே பங்கேற்கவிருப்பதோடு முகக்கவசம் அணிவது, வழிபாடுகளின்போது சமூக இடைவெளியை பேணுவது மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

ஹஜ் கடமைக்குப் பின்னரும் யாத்திரிகர்கள் இரண்டாம் கட்ட தனிமைப் படுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.