Header Ads



இந்நாடு ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல - 69 இலட்சம் வாக்குகளுக்கும் மூலகர்த்தாக்கள் நாம்தான் - ஞானசாரர்


இந்த நாடு மஹிந்த ராஜபக்சக்களின் பரம்பரை சொத்தல்ல. பரம்பரை அரசியல் என்பதை ஒருபோதும் அனுமதியோம் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

பரம்பரை அரசியல் என்பதை ஒருபோதும் அனுமதியோம். இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் தேவைப்பட்டது.

அதுவும் பௌத்த நாடான இந்த நாட்டையும், பௌத்தர்களையும் பாதுகாக்கும் சுத்தமான ஒரு பௌத்தனின் தேவை எமக்குத் தேவைப்பட்டது.

எதற்கும் அசைந்து கொடுக்காது எந்த அடிப்படைவாதத்திற்கும் அடிபணியாத நல்ல பௌத்த தலைவன் தேவைப்பட்டதால் கடந்த பொதுத் தேர்தலில் 69 இலட்சம் தனி பௌத்த மக்களின் வாக்குகளோடு நாம் கோட்டாபய ராஜபக்சவைத் தெரிவு செய்தோம்.

இந்த 69 இலட்சம் வாக்குகளுக்கும் மூலகர்த்தாக்கள் நாம் தான் என்பதை மிகவும் ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமல் எவரும் வெற்றியடைய முடியாது என்ற அடிப்படை வாதிகளின் போலிவாதங்களை நாம் ஜனாதிபதித் தேர்தலில் உடைத்தெறிந்துவிட்டோம்.

நடக்க போகும் ஆகஸ்ட் மாதத் தேர்தலின் போது இந்த நாட்டு பௌத்தர்கள் ஓரணியாக திரண்டு கலப்படம் இல்லாத ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.

1 comment:

  1. "காக்கை உக்கார்ந்து பனங்காய் விழுந்ததாம்" என்ற நினைப்பு இது!

    நீங்களும் உங்கள் கட்சியும் தேர்தலில் கலந்துகொண்டு இலங்கையில் அனைத்து பகுதியிலும் பெற்ற வாக்குகள் 20000 ஆயிரம்

    தற்போது தேர்தலில் நீங்கள் கலந்துகொண்டால் 10000 ஆயிரம் கிடைக்குமா என்பது கேள்வி!

    அதிமாக உள்ட்டா பன்னவேண்டாம் அணிந்துள்ள காவிநிற பிடவைக்கு மரியாதி இல்லை

    ReplyDelete

Powered by Blogger.