Header Ads



முஸ்லிம்களின் 3 விடயங்களில், இனவாதிகள் குறிவைத்துள்ளனர் - இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசியப் பட்டியல் வேட்பாளர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் இன்று ஞாயிற்றுக்கிழமை -12- காலி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். 

இதன்போது அவர் தெரிவித்த கருத்துக்கள்

இனவாதத்தை விதைத்து எப்படியாவது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென ஓர தரப்பு துடிக்கிறது. அவர்களின் நோக்கம் முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்குவது அல்லது குறைப்பது ஆகும்.

அந்தவைகயில் தற்போது ஜாமிஆ நளீமிய்யா மற்றும் மத்ரசாக்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களும் சேறடிப்புகளும் நடைபெறுகின்றன. 

மேலும் முஸ்லிம்களுடைய பொருளாதாரமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய கடைகளில் சாமான் வாங்க வேண்டாம் மற்றும் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாமென்ற பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் அதிகமாக கிடைத்த பகுதிகளில் தற்போது பல சுயேற்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இதனுடைய நோக்கம் வழமையாகவே அப்பிரதேசங்களில் தெரிவாகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இல்லாமலாக்குவதாகும். 

இது எல்லாவற்றையும் எமது முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். எமது எதிர்காலம் பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

சில வெளிநாடுகளில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதோ அதையொத்த ஓரு நிலையை இங்கும் ஏற்படுத்த முற்படுகிறார்களோ என்ற சந்தேகம் எமக்கு உருவாகியுள்ளது. அவர்களின் செயற்பாடுகளும், பேச்சுக்களும் அப்படித்தான் உள்ளன. 

எனவே முஸ்லிம்கள் தமது பிரதேசங்களிலவ் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதுடன், இன பேதமற்றும் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் வாக்களிக்க முன்வர வேண்டுமென்றார்.

5 comments:

  1. u telling correct
    dont vote following pary

    podajna paramuna
    unp
    slfp
    indpendant party related with podujana parmuna

    ReplyDelete
  2. NUMBER ONE INAVAATHI CHMPIKVIN
    MADIYIL UTKAANDUKONDU,
    MATRAVARKALAI INAVAATHI
    ENRU KOORI EMAATRA PARKIRAI.
    UN PECHAI NAMBI MUSLIMGAL
    INIUM EMAARAMAATTAARKAL.

    ReplyDelete
  3. இந்த விடயங்களுக்கு மூல காரணமாக காணப்படுபவர் சம்பிக்க ரணவக்க

    ReplyDelete
  4. Wel said but our politician must learn a good lesson.

    ReplyDelete

Powered by Blogger.