July 28, 2020

பொதுஜன பெரமுனவிலிருந்தே 3/2 பெரும்பான்மை கொண்டதொரு பாராளுமன்றம் அமைதல் வேண்டும் - அலி சப்ரி


(அஸ்ரப் ஏ சமத்)

இந்தப் பாராளுமன்றத் தோதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.  தற்போதைய ஜனாதிபதி 5 வருடம் ஆட்சிப் பொருப்பை எடுத்தாலும் அவருக்கு  ஆதரவானதொறு  பாராளுமன்றம் இல்லாமல் அவசியமாக உள்ளது.  . இந்த நாட்டில்  தற்பொழுது  அமுலில் உள்ள  19வது அரசியல் சட்டத்தின் படி ஜனாதிபதிக்கு  உரிய சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது.  நிதி , சட்ட திட்டங்கள் பாராளுமன்றம் ஊடகவே அனுமதிக்கப்படல் வேண்டியுள்ளது. ஆகவே தான் அதனை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.  அதற்காக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியிலிருந்தே  மூன்றில் இரண்டு   பெரும்பான்மை கொண்டதொரு பாராளுமன்றம் அமைதல் வேண்டும்  .   அந்த பாராளுமன்ற உறுப்பிணா்கள்   ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும் பிரதம மந்திரிக்கும் ஆதரவானவர்களாக இருத்தல் வேண்டும்.  கடந்த காலங்களைப்போன்று  பணத்திற்கும். பதவிக்கும் கட்சி மாறுபவா்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்.  பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து  சிறந்த  பாராளுமன்ற உறுப்பிணா்களை தெரிபு செய்து பாரளுமன்றம் அனுப்புங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றினாா்

தெகிவளை கல்கிசை முன்னாள் மேயா் தனசிரி அமரதுங்கவை ஆதரித்து  தெகிவளை கவுடான வீதியில் உள்ள  மைதானத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.  இந நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேற்கண்டவாறு  உரையாற்றினாா்.

அலி சப்றி அங்கு  தொடா்ந்து  உரையாற்றும்போது தெரிவிததாவது 

 ஜனாதிபதி அவா்கள் இந்த  நாட்டில் உள்ள சில இளைஞா்கள்  போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளாா்கள். இதனை நாட்டுக்குள் கொண்டுவருவா்கள் இதனை கடத்துபவா்கள்  வியாபாரம் செய்பவா்கள் இதற்கு உதவி செய்யும் அரச அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் என பலரை  இனம் கட்டு  அதற்காகவே  விசேட அதிகாரிகளையும்  நியமித்து இந்த கொடிய போதையில் இருந்து  நாட்டினை பாதுகாப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றாா்.  . இதனால் இந்த நாட்டில் வாழும் பௌத்தா்கள் மட்டுமல்ல  சகல இன மக்களும் நன்மையடைவாா்கள்.  இதே போன்று தான் அவா்  கொடிய கோரோனாவில் இருந்து இந்த நாட்டினை  பாதுகாத்தாாா். அவா் யாழ்ப்பாணம், ஜாஎல, பேருவளை என சகல பிரதேசங்களையும் சமமாக பாதுகாத்தாா்.. அவா் ஒரு சிறந்த நிர்வாகி, நல்ல தீா்க்க தரிசனமும் கொ்ண்டவா்.  மலேசியாவை கட்டியெழுப்பிய  மகதிா் மகுமூத், சிங்கப்புா் கட்டி எழுப்பிய  லீக்குவாங் சிங் போன்ற தலைவா்கள் போன்று  கோட்டபாய ராஜபக்சவும் இலங்கையை பொருளாதாரத்தில் இருந்து  கட்டியெழுப்புவதற்கும் முயற்சி எடுத்துவரும்  ஒரு தலைவா் 

கடந்த வருடம் நல்லாட்சியில் இலங்கையின் பொருளாதாரம் 2.1 தள வருமானத்தில் இருந்தது. ஆப்கனிஸ்த்தான், நேபாளாம், பங்களதேஸ், இந்தியா போன்ற நாடுகளுக்கு பின் நிலையில் தான்  நாம் நிற்கின்றோம். ஆனால் 2015ல் மகிந்த ராஜபக்ச அவா்கள்  ஆட்சியில் இருக்கும்போது பொருளாதாரத்தில்  7.1ல் நாம் இருந்தோம்.   

  தெகிவளை கல்கிசை மேயா் தனசிரி அமரதுங்க அவா்கள் ஜாதி, இன மத பேதமற்று சகல மக்களுக்கும் நோ்மையாக வேலை செய்யக் கூடியவா்  தற்போதைய ஜனாதிபதி  பிரதமா் அவா்களின் ஆசிா்வாதம் பெற்றவா்.  தெகிவளை கல்கிசை வாழும் 25ஆயிரத்திற்கு் மேற்பட்ட தமிழ் முஸ்லிம் வாக்காளா்கள் உள்ளனா். அவா் 2 முறை மேயராக பதவி வகித்து இந்தப் பிரதேச சகல மக்களையும் சமமாக சேவை செய்தவா்.  நீங்கள் தனசிரியை ஆதரியுங்கள்.   கடந்த ஜனாதிபதித்  தோ்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனாதிபதியின் கட்சியே இந்த நாட்டில் ஆட்சியமைக்கப் போகின்றது. அதுதான் வரலாறு. ஆகவே சிறுபான்மை மக்கள் நன்றாக  சிந்தித்து ஆகஸ்ட் 5ஆம் திகதி வாக்களியுங்கள்   என வேண்டிக் கொண்டாா். 

 கடந்த 5 மாதங்களாக கோரோனாவின் பிடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் இந்த நாட்டினை பொருளாதார துறையிலும் தன்னிரைவு கானுதல் வேண்டும்.

3 கருத்துரைகள்:

இவனுக்கு முத்திவிட்டது


ஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்,என்று முஸ்லீம் குரல் ("The Muslim Voice") 2015 முதல் இருந்து இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் கோதபய ராஜபக்ஷ புதிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், எங்கள் “மாத்ருபூமியா” என்கிற மக்களிடமிருந்தும் கேட்கிறார். இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து சிறந்த பாராளுமன்ற உறுப்பிணா்களை தெரிபு செய்து பாரளுமன்றம் அனுப்புங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறியது போல சிந்தியுங்கள். எனவே டெஹிவேலா மவுண்ட் லாவினியாவில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் முன்னாள் மேயா் தனசிரி அமரதுங்கவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய முஸ்லிம் ஒழுங்கமைக்க இது சரியான தருணம். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

சாம்பலாவதைத் தடுக்க வேண்டியவர்
எரிப்போரையே ஆதரிக்கக் கேட்கிறார்
என்னா உலகம், என்னா கோழைத்தனம்?

Post a comment