Header Ads



ஜனாதிபதி நிதியத்தின் மீதி 1450 மில்லியனாக அதிகரிப்பு


தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1450 மில்லியனாக அதிகரித்துள்ளது.

வென்னப்புவ பிரதேச சபையின் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் 166,000 ரூபாவையும், திருமதி பிரியந்தி ஆர். பீரிஸ் 5.000 ரூபாவையும், ‘A’ Group Construction & Consults இன் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பீ. தயாபரன் 200,000 ரூபாவையும், மரக்கறி, பழங்கள் மற்றும் தானியங்கள் மொத்த விற்பனையாளர்களின் நலன்புரி சங்கத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன 200,000 ரூபாவையும், திரு எச்.கே. சிறிசேன 50,000 ரூபாவையும் திருமதி பீ.பி.சுமனாவதி 6,500 ரூபாவையும், திரு டப். மனோஜ் லலித் பெர்னான்டோ 64,000 ரூபாவையும், மற்றும் திரு.எம்.ஏ.பீடர் வில்பிரட் 5,000 ரூபாவையும், இந்நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர். குறித்த காசோலைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தபோது கையளிக்கப்பட்டன.

செல்வி.டீ.எம்.உதுலா விஷ்வனீ 5,000 ரூபாவையும், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் 263,628.56 ரூபாவையும், Wettasinghe Pharmaceutical Distributors (Pvt) Ltd 50,000 ரூபாவையும், உடுநுவர பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்புரி சங்கம் 189,625.34 ரூபாவையும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பொதுச்செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன 88,000 ரூபாவையும் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,450,326,673.05 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.08

No comments

Powered by Blogger.