Header Ads



பலகோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள FB - வெறுப்புணர்வு பதிவுகளை களைவதாக மார்க் ஜூகர்பெர்க் உறுதி

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இனவெறி, வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இதை சுட்டிக்காட்டி கோககோலா நிறுவனம் பேஸ்புக் விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. இதனால் பேஸ்புக் நிறுவனம் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக்கில் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள் களையப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பேஸ்புக்கில் போலி செய்திகள், மிரட்டல்கள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் ஆகியவை களையப்படும். மேலும் போலியான கணக்குகள் மூலம் சமுதாயத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பெரிய அரசியல் தலைவர்களும் பேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுதான் பதிவுகளை இடவேண்டும், அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது என அவர் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.