Header Ads



லீசிங் நிறுவனங்களில் ஒப்பந்தத்திற்கு வைக்கப்பட்டுள்ள ரவுடிகள்


இங்கு விழுந்து (மரணித்து) கிடப்பவர் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் சங்க தலைவர்.

சுற்றி நிக்கும் தறுதலைகள் அடித்தே கொண்டிருக்கிறார்கள்

நேற்று -11- லீசிங்க் என்ற முறையில் மக்களை சுரண்டி பணம் சுருட்டும் லீசிங் மாபியா பற்றி தனது முகநூலில் வீடியோ பதிவேற்றியவர் 


இன்று அவரால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவன ஊழியர்கள் அவரை பலர் பாத்திருக்க அடித்து கொன்றுள்ளனர்.

இப்போ 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார்கள்.

லீசிங் முறையில் வாகனத்தை விற்பதும். வாங்கியவர் பல வருடங்களுக்கு அந்த லீசிங் கொம்பனிக்கு மாஞ்சு மாஞ்சு உழைப்பதும். இறுதியில் நாலைந்து தவணைகள் கட்டணம் கட்டாது விட்டதும், குண்டர்களை கொண்டு வாகனத்தை தூக்குவதும் லீசிங் நிறுவனங்களின் வழமையான செயல்கள்.

கடன் வாங்கி வாகனம் வாங்கியவர் வாகனமும் இல்லை உழைச்ச காசும் இல்லை என்ற நிலையில் தற்கொலை செய்வதும். அல்லது லீசிங்க் கம்பெனி ஆக்கள் குடும்ப மானத்தை கப்பல் ஏற்றி அதால குடும்ப பிரச்சினை, மன விரக்தி என்று கடைசியா மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்வதும் என்று சமூக பிரச்சினைகள் பலவிதமாக உள்ளன.

இந்த மாபியா பற்றி நேற்று வாயை திறந்த தொழில் சங்க தலைவர், அந்த மரண மாபியாவால் அடித்து கொல்லப்பட்டமை எவ்வளவு தூரம் சிக்கலான விடயம் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளலாம்.

லீசிங்க் முறையில் வாகனமோ என்ன பொருளோ வாங்குவதாயினும் தமது உழைப்பை கம்பெனிக்கு குறிப்பிட்ட காலம்வரை கொடுப்பது என்ற விழிப்புணர்வை கொண்டிருத்தல் வேண்டும். அதற்கான இயலுமையையும் வாய்ப்பினையும் கொண்டிருக்காவிட்டால் இவ்வாறான லீசிங்கில் வாங்குவதை தவிருங்கள்.

அவ்வாறு செய்தாலே நிறைய லீசிங் கம்பெனிகள் இழுத்து மூடிட்டு போயிடுவார்கள். ஏனெனில் உங்களிடம் முழு தவணையையும் செலுத்த முடியாது, அவ்வாறான நிலையில் நீங்கள் அதுவரைக்கும் கட்டிய தவணை பணமும், கைப்பற்றப்பட்ட வாகனமும், அதற்க்கு உண்டான இதர செலவுகள்தான் அவர்களுக்கு இலாபம். ஆகவே நீங்கள் தொடர்ந்தும் ஏழையாக இருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த எதிர்பார்ப்பு அநேகமான லீசிங் நிறுவனங்களின் மொத்த எதிர்பார்ப்பாகும்.

ஏழைகள் தொடர்ந்தும் ஏழையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத லீசிங் நிறுவனங்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு நிலைமை உள்ளது.

அதாவது எந்தவொரு லீசிங் நிறுவனமும் வாகனத்தை கைப்பற்றவும், வாடிக்கையாளரை மிரட்டி பணத்தை பிடுங்கி கொள்ளவும் ரவுடிகளை ஒப்பந்தத்திற்கு வைத்துள்ளனர். இதுவே உண்மை.

- Sajanthan Kanagaratnam -

No comments

Powered by Blogger.