Header Ads



மல்கம் ரஞ்சித் மீதான ஹரீனின், விமர்சனத்திற்கு நாமல் எதிர்ப்பு

மதகுருமார்களை அவர்களது நடவடிக்கைகள் அறிக்கைகளிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிப்பதை நான் ஏற்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முதலில் பௌத்த மத தலைவர்கள் மங்களசமரவீரவினால் தாக்குதலிற்குள்ளானார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போது கத்தோலிக்க மத தலைவர்களை ஹரீன் பெர்ணான்டோ விமர்சித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதங்களை விமர்சிப்பதை அல்லது ஆலோசனை வழங்குவதை தவிர்த்துக்கொள்ளும் கொள்கையை அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம்சாட்டியுள்ளார். மெதிரிகிரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை கோத்தபாய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்வைப்பதற்கு பயன்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று சில நாட்களிற்குள் தனியார் தொலைக்காட்சியொன்று கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுரீதியில் கத்தோலிக்கர்கள் ஐக்கியதேசிய கட்சிக்கே வாக்களித்தனர் ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அந்த நிலைமை மாறியது என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பேராயர் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டார் அது தேர்தலில் மக்களின் ஆதரவு ராஜபக்சவிற்கு சார்பாக திரும்புவதற்கு காரணமாக அமைந்தது எனவும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நான் அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எனது ஏமாற்றதை தெரிவித்தேன் என ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த புலனாய்வு அறிக்கைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க உண்மையாகவே எதனையும் அறிந்திருக்கவில்லை என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.