Header Ads



ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவுசெய்யப்படாதிருந்தால் மோசமான நிலைமைக்கே எமது நாடு தள்ளப்பட்டிருக்கும்.

- எம்.கிருஸ்ணா -

எமது நாட்டிற்கு ஜனாதிபதியாக நாம் கோட்டாபய தெரிவுசெய்யாதிருந்திருந்தால் கொரோன பாதிப்பு அமெரிக்கா நாட்டில் ஏற்பட்ட நிலையோடு மோசமான நிலைமைக்கே எமது நாடு தள்ளப்பட்டிருக்கும். ஜனாதிபதியானாலே எமது நாட்டில் கொரோன தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்

இன்று -19- ஹட்டன் பகுதியில் கட்சியின் காரியாலயத்தினை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“உலகின் செல்வந்த நாடான அமரிக்காவில் கொரோனா வைரஸினால் ஒரு இலட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு இலட்சத்துகு மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அமரிக்கா நாடு சுடுகாடாக மாறியுள்ளது. எமது நாடும் சுடுகாடாக மாறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மாத்திரம் இல்லாவிட்டால். தேர்தல் காலப்பகுதியில் நாம் வேறு வேறாக போட்டியிட வேண்டும் அதற்கு காரணம் ராஜாவிற்கு எதிராக அல்ல தமது கட்சியினை வளர்த்துகொள்ள சிலர் விரும்புகின்றனர் .

கோவிட் 19 ஆரம்பிக்கபட்ட முற்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டது. இதற்கு மக்கள் எதிர்பினை வெளிபடுத்தினர் . இரண்டு மாங்கள் கடந்த பின்பு ஜனாதிபதியின் வேலைதிட்டத்தினை சரியென மக்கள் ஏற்று கொண்டனர் . இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் நாம் சந்தோசபடுகிறோம்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவோடு இணைந்து செயற்பட நாம் முடிவெடுத்துள்ளோம் அவருக்கும் நாம் பலத்தினை வழங்குவோம் . ஆனால், சிலர் ஜக்கிய தேசிய கட்சியோடு இணைந்து செயற்பட முயற்சிக்கின்றனர். அப்படி முயற்சி செய்கின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிச்செல்லும் முடியும் . இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பெரமுன கட்சிக்கு எதிர்கட்சியாக செயற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.