Header Ads



இலங்கை உலக கிண்ணத்தை, வெற்றிகொண்டதை பிரபாகரனும் கொண்டாடினார் - ஹிருணிகா

இலங்கை அணி உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அதனை கொண்டாடினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு இலங்கை - இந்திய அணிகள் மோதிக்கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அப்போது விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மஹிந்தனந்த அளுத்கமகே அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் தற்போது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஹருணிகா தொடர்ந்தும் பேசுகையில்,

“இலங்கை கிரிக்கெட் அணியினாலேயே, உலக நாடுகள் இலங்கையை திரும்பி பார்க்கின்றன. முன்னாள் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்து மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட கிரிக்கெட் போட்டியை நேசித்தார். பிரபாகரன் என்ற பாத்திரத்தை நாட்டு மக்கள் சகலரும் வெறுக்கின்றார்கள்.

எனினும், 1996ம் ஆண்டு இலங்கை அணி உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது, இந்த வெற்றியை பிரிபாகரன் கொண்டாடியிருந்ததாகவும் ஹிருணிகா கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையர்கள் அனைவரும் கிரிக்கெட் போட்டியை நேசிக்கின்றார்கள்.

இந்நிலையில், உலக கிண்ண போட்டி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இவ்வாறு கூறுவது வேதனையளிப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.