Header Ads



முறைகேடுகளுக்கும், துஷ்பிரயோகத்திற்கும் மைத்திரிபால பொறுப்புக் கூற வேண்டும்

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  சுதந்திர கட்சியுடன் கூட்டணியமைத்திருந்தாலும் அரசியல் ரீதியிலான போட்டியில் தனித்தே செயற்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொறுப்பு கூற வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை இணைத்துக் கொண்டு  பொதுஜன பெரமுனவினர் அரசியல் ரீதியில் பயணிப்பதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.    

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவில்  ஒரு கூட்டணி கட்சியாகவே இணைந்துள்ளதே தவிர முக்கிய பங்காளி ஒன்றுமல்ல,

பொதுத்தேர்தலில்  பொதுஜன பெரமுன  மொட்டு சின்னத்தில்  போட்டியிடுவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும்.

மக்களே  சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள்.  நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற முறைக்கேடுகள், அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கு அரச தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும்.

சுதந்திர கட்சியினர்  பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளதால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுப்பட்டதாக  கருத முடியாது. 

கூட்டணியிமைத்துள்ளோம். அவர்கள் தனித்து  போட்டியிடுகிறார்கள்.  மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டுமா, வேண்டாமா, என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றார்.

1 comment:

  1. இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த ஏப்ரலில் பொதுமக்கள் கொன்றொழிக்கக் காரணமாக இருந்து மைத்திரியை சிறையில் அடைக்க வேண்டும் என ஒரே குரல் எழுப்ப வேண்டும். மனித இனம் சார்பாக இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.