Header Ads



கோமாரியில் இன்று கரையொதுங்கிய அரியவகை நீல திமிங்கிலம் - பார்ப்பதற்கு திரண்ட மக்கள் (படங்கள்)

 பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில்  பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இதே வேளை அம்பாறை மருதமுனை - பெரியநீலாவணை கடற்கரை இன்று இராட்சத சுறாமீன் பிடிபட்டுள்ளது.

சுமார் 20 அடி 1500 கிலோவிற்கு அதிகமான இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர் .கரைவலை மீனவர்களது மீனவர்களது வலையில் சிக்கிய இராட்சத மீனை பார்வையிட பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர்.

அரிய வகை புள்ளி சுறாவினை  பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது.இவ்விரு மீன்களையும் பார்ப்பதற்கு அதிகளவான மக்கள் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர்.


No comments

Powered by Blogger.