Header Ads



பொலிஸ் அதிகாரிகள் நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைப் முறைப்பாடு செய்ய 109 இலக்க அவசர அழைப்பை ஊக்குவிப்பதற்காக, பொலிஸ் சிறுவர்  பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு புலனாய்வுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது. 


நிகழ்வில், பல பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 350 அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பில் துண்டுப்பிரசுர விநியோகம், கண்காட்சிகள், தெரு நாடகங்கள் மற்றும் துஷ்பிரயோகம் தடுப்பு, கிடைக்கக்கூடிய ஆதரவு சேவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலி முகத்திடலில்  சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




No comments

Powered by Blogger.