Header Ads



சாட்டோ விளையாட்டுக் கழகம், அமீர் அலிக்கு ஆதரவு

செம்மண்னோடை சாட்டோ விளையாட்டுக் கழகம் மற்றும் சாட்டோ இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த பகற்போசனை நிகழ்வு வட்டாரக் குழு தலைவர் நஜிமுதீன் தலைமையில் 2106.2020 சந்தியாற்று பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார்.

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு தங்களது பூரணமான ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டனர்.

மேலும் தவிசாளர் அஸ்மி, முன்னாள் தவிசாளர் ஹமீட், சட்டத்தரணி ராசிக், மத்திய குழு செயலாளர் அக்பர்  அமைப்பாளர் ஹக்கீம் ஆசிரியர், மாவடிச்சேனை வட்டாரக் குழு தலைவர் சமீம் பதிவாளர் லத்தீப் ஹாஜி,  மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.