June 25, 2020

இனவாதிகளுக்கு கடிவாளம் அவசியம், மகிந்தவால் மட்டுமே அதனை செய்ய முடியும் என்கிறார் ஹக்கீம்


அரச தரப்பில் இருக்கின்ற சிலரது வாய்களுக்குக்கு கடிவாளம் போடவேண்டும்.  ஏனென்றால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாவிட்டால் சாதாரண பெரும்பான்மையைக்கூட ஆளும் தரப்பினால் பெறமுடியாமல் போய்விடுமோ என்ற அச்ச நிலை இப்போது தோன்றியுள்ளது.

அத்தகைய இனவாத கருத்துக்களை வெளியிடுவோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.

ஆட்சி அமைக்க சிறுபான்மை சமூகத்தினரினதும் வாக்குகள் அவசியம் என்ற பிரதமரின் அண்மைய பேச்சு அவரின் முதிர்ந்த அரசியல் ஞானத்தை குறிக்கிறது இருந்தபோதும் அவர் இவ்வாறு பேசுவதனால் மாத்திரம் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,..

இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் ஆழமாக சிந்தித்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்குகின்ற வகையில் நமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

சிறுபான்மை சமூகத்தின் தன்மானமும், சுயகௌரவமும் பேணப்படுகின்ற வகையில் ஆணவத்ததோடு செயற்படுகின்றவர்களுக்கு தமது எதிர்ப்பை இந்தத் தேர்தலில் காட்டுவார்கள் என்பது எனது கணிப்பு.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் எடுத்த முடிவு மிகச்சரியானது. இதனை ஜனாதிபதியிடம் நான் தைரியமாக சொன்னேன். நீங்கள் ஜனாதிபதி ஆகியது தொடர்பில் நாங்கள் சந்தோசப்படுகிறோம். அதேவேளை நாங்களும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பௌத்தர் ஒருவருக்கே ஆதரவு வழங்கினோம். அதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அது எங்களது ஜனநாயக உரிமை. ஆனால் நாங்கள் ஆதரித்தவர் ஏன் வெற்றிபெறவில்லை என்பது தொடர்பில் எங்களை நாங்களே சுயவிமர்சனம் செய்து கொள்கிறோம்.

சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் உங்களை சந்தைப்படுத்த முடியாமல் இருக்கிறது நீங்கள் கொஞ்சம் விலகியிருக்குமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் வினயமாக கேட்டுக்கொண்டோம்.அவர் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அவரோடு பேசிப்பார்த்தோம் அவர் மசியவில்லை. சம்பந்தன் ஐயாவு ம் சொன்னார். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த மூன்று ஜனாதிபதித்தேர்தல்களிலும் அவரால் களமிறங்க முடியவில்லை. இரண்டு தேர்தல்களுக்கு இருவரை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலும் இரண்டாவதாக இறக்குமதி செய்தவர் செய்த வேலைகள் நாம் யாவரும் அறிந்ததே.

3 கருத்துரைகள்:

MUTHALIL, HAKEEMUKKUM, RISHADUKKUM,
KADIVAALAM PODUVATHAI, AARAMBIKKA
VENDUM.

தமிழ் மக்களிடம் இருந்து புலிகள்  வேறுபடுத்தப்பட்டதன் பின்னால் எவ்வாறு யுத்தம் இலகுவாக வெல்லப்பட்டதோ, அதே போன்று இலங்கை மக்களிடம் இருந்து இனவாதிகள் வேறுபடுத்தப்பட்டதின் பின்னாலேயே இலங்கை தனது கலண்டரைத் தொடங்கும்.

இனவாதிகள் வேறுபடுத்தப்பட இலகுவான வழி,  அவர்கள் என்ன உருவில் வந்தாலும், பாராளுமன்றம் முதல் பள்ளிகள் அடங்கலாக  எங்குமே பகிரங்கமாக எதிர்க்கப்படல் வேண்டும்.  அவ்வாறு எதிர்ப்போர் ஓர் தேசியக் கூட்டணியாக பரிணமித்து ஆளும் நாளே இந்நாட்டின் பொன்னாள் ஆகும்.

மகிந்தவால் தான் முடியும் என்பது ரனிலுக்கும் விளங்கும் சஜித்துக்கும் விளங்கும் ஆனால் இவருக்கும் (ஹக்கீம்)றிசாத்திற்கும் நல்ல lateஆத்தான் விளங்கும்.டீலின் பெறுமதியே அதனைத் தீர்மானிக்கும்.

Post a comment