Header Ads



ஓய்வு பெறுகிறார் அண்டர்டேகர்


வேல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (World Wrestling Entertainment) எனப்படும்  பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் மல்யுத்த வீரர் அண்டர்டேகர்(Undertaker).

மார்க் காலவே(Mark  Calaway) என்ற இயற்பெயரைக் கொண்ட அண்டர்டேகர் 1990ஆம்  ஆண்டு WWEல் இவர் அறிமுகமானார்.

கடந்த 30 வருடங்களாக இத் துறையில் பிரகாசித்துவந்த அண்டர்டேகரின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் ஆவணப்படம் ‘அண்டர்டேகர் தி ஃபைனல் ரைட்’ ( Undertaker: The Last Ride ) என்ற பெயரில் தற்போது  ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இப் படத்தின் இறுதியில் தனக்கு மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “என்றும் முடியாது என்று சொல்லக்கூடாது. ஆனால், என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், மீண்டும் அந்த மேடையேறும் எண்ணம் எனக்கு இல்லை. பயணத்தை முடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் இனிசாதிக்க எதுவும் இல்லை. ஜெயிக்க எதுவுமில்லை. ஆட்டம் மாறிவிட்டது. புதியவர்கள் வருவதற்கான நேரம் இது. இதுதான் சரியான நேரமாகத் தோன்றுகிறது. இந்த ஆவணப்படம் அதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது. ” என்று அண்டர்டேகர்  தெரிவித்துள்ளார்.

இதுவரை ரெஸில்மேனியாவில்(wrestlemania) சண்டையிட்ட 27 போட்டிகளில் 25இல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.