Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள், போட்டியிலிருந்து விலகுவது ஏன்..?

- ஐலன்ட் -

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கையா என தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன?
வேட்பாளர்கள் விலகுவதன் காரணமாக தேர்தல் நடைமுறைகள் மேலும் பாதிக்கப்படலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

ஜூன் 9 ம் திகதிக்கு பின்னர் ஐக்கியமக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மூவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஐக்கியமக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட தந்திரோபாயமா என கேள்வி எழுப்பியுள்ளன.

இவ்வாறான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தேர்தல் முறைமீது மோசமான தாக்கத்தை செலுத்தலாம் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பின் பேச்சாளர் மஞ்சுளகஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர உட்பட ஐக்கியமக்கள் சக்தியின் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகியுள்ளமை பாரதூரமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, ஐக்கியதேசிய கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவான ஐக்கிய மக்கள் சக்தியை, பலவீனப்படுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியா இது எனஐலன்ட் கேள்வி எழுப்பியது,இதற்கு பதிலளித்துள்ள மூன்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும்ஊடகங்களோ அல்லது வேறு எந்த அமைப்போ இதுவரை இது குறித்து கேள்வி எழுப்பவில்லை என தெரிவித்துள்ளன.

இவ்வாறான கண்டித்தக்க தந்திரோபாயம் முன்னெடுக்கப்படும் என்றால் இது அரசியல் கட்சி முறை மேலும் மோசமடைவதை விரைவுபடுத்தும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பின் பேச்சாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை பின்பற்றாமைக்காக ஏற்கனவே விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ள அரசியல் கட்சிகள் மீது வாக்காளர்கள் நம்பிக்கை இழக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கண்காணிப்பாளர்கள் கொண்டுவருவார்களா என்ற கேள்வின்கு மஞ்சுள கஜநாயக்க இது இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் கவனம் செலுத்தவேண்டிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர்கள் விலகுவதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு முன்னர் மேலும் பலர் போட்டியிலிருந்து விலகுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகுவதை நாடாளுமன்ற தேர்தல் சட்டமும் ஏனைய சட்டங்களும் தடை செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மஞ்சுள கஜநாயக்க எனினும் இ;வ்வாறு விலகியவர்கள் நம்பகதன்மை மிக்க காரணத்தை முன்வைக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் விலகுவது நியாயமான நடவடிக்கையில்லை குறிப்பிட்ட கட்சி வேறு எவருக்காவது சந்தர்ப்பத்தை வழங்கியிருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஜோதிடருமான நெலுக ஏக்கநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய தலைமையை விமர்சித்த பின்னர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் போது ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
மார்ச் 12 திகதி முதல் 19 ம் திகதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பின் மஞ்சுளகஜநாயக்க ஆழமாக பரிசீலிக்காமல் வேட்புமனுக்களை பெற்றிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலிற்கு உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் அவர் திடீரென பதவி விலகியமைக்கு என்ன காரணம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் முறையினால் மேலும் தாக்குதலை சந்திக்க முடியாது என்பதால் இவ்வாறான நியாயமற்ற தந்திரோபாயங்களை தவிர்க்கவேண்டும் என பவ்ரல் அமைப்பின் ரோகன ஹெட்டியாராச்சியும்,கபேயின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அகமட் மனாஸ மக்கீனும் தெரிவித்துள்ளனர்.

பவ்ரல் இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லுமா என்ற கேள்விக்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் என்ன செய்ய முடியும் என பவ்ரலின் ரோகனஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள போதிலும் எந்த கட்சியிலிருந்தும் போட்டியிடுவதற்கான சலுகை வேட்பாளர்களிற்கு உள்ளதால் தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தில் தலையிடமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு கட்சியுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐக்கியமக்கள் சக்தியின் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.