June 23, 2020

முஸ்லிம்களது பிரச்சினைகளை பேசவே மர்ஜான் பளீல், அலி சப்ரி தேசிய பட்டியலில் உள்ளீர்ப்பு - பிரதமர் மகிந்த தெரிவிப்பு


(அஸ்ரப் ஏ சமத்)

தெகிவளை-கல்கிசை முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா பொதுசனப் பெருமுனைக் கட்சியின் கொழும்பு மாவாட்ட வேட்பாளருமான தனசிறி அமரதுங்கவை அவரது  இல்லத்தில்  தெகிவளை வாழ் தொழில் சாா்ந்த 40 மேற்பட்ட முஸ்லிம்கள்  23.06.2020  தனசிரி இல்லத்தில் சந்திப்பை ஒன்றை மேற்கொண்டனா்.  இச் சந்திப்பினை  கணக்காளா் நவாஸ் முஸ்தபா ஏற்பாடு செய்திருந்தாா்.  

இந் நிகழ்வில்  உரையாற்றிய தனசிறி அமரதுங்க -  

 கொழும்பு மவாட்டத்தில் எமது கட்சியில் ஏன் முஸ்லி்ம் வேட்பாளா்களை நிறுத்த வில்லையென பிரதமா் மகிந்த ராஜபக்சவிடம்   கேட்டேன். ?  முஸ்லிம்களது பிரச்சினைகளை பேசுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சபறி, மர்ஜான் பளீளை தேசிய பட்டியலில்  பெயா் இடப்பட்டுள்ளது. . அவா்கள் ஊடாக முஸ்லிம்களது பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேசித் தீா்வுகளை பெற்றுக் கொள்ளாம். எனக் கூறப்பட்டது.   

நான் தெகிவளை -கல்கிசை மேயராக பதவி வகித்த காலத்தில் இங்குள்ள பள்ளிவாசல்கள், கோவில்களையும் இப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களையும் பாதுகாத்து வந்தாகவும் கூறினாா். அளுத்கமை  பிரச்சினைகள் நடைபெற்ற காலத்தில்   தெகிவளை -கல்கிசை பொலிஸாா்களோடு இனைந்தும்  மற்றும் எனது ஆதரவான இளைஞா்களை கொண்டு களத்தில் இறங்கி  தெகிவளை கல்கிசை  பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள்யும் பள்ளிவாசல்களையும் எவ்வித அசம்பாவிதங்கள்  நடைபெறாமல் பாதுகாத்ததாகவும் கூறினாா்கள். சிலா் பிரச்சினைகளை ஏற்படுத்த இருந்தாா்கள் அதனை தடுத்தாகவும் கூறினாா். நான் ரோயல் கல்லுாாியின் படித்தவன். என்னோடு பல பாடசாலை நண்பா்கள் உள்ளனா். இன்றும் எனது முஸ்லிம் நண்பா்கள் பலா் உள்ளனா்.  என்னிடம் ஒருபோதும் இனத்துவேசம், மதவாதம் இல்லை.. ஆனால் இந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சவும் இணைந்து இந்த நாட்டில் பயங்கரவாதம், போதைவஸ்த்து, பாதள கோஸ்ட்டியினா்   இனரீதியாக இயங்கும் கடும்போக்குடைய மதவாதிகள் இயக்கங்கள் போன்றவற்றை அழித்து இந்த நாட்டில் சகல மக்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கே வழிவகுக்கின்றாா்கள்.

. கொழும்பில் இன்றும் மக்கள் மலசல கூடம்  அடிப்படை வசதிகள்  இல்லாமல்  முடுக்கு பலகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றாா்கள்.   ரத்மலனை தொட்டு தெகிவளை கடற்கரைஓரங்கள்,  பாலங்கள் ஓரங்களிலும் மக்கள் கஸ்டமாக வாழ்கின்றாா்கள். சில குடும்பங்கள் 5 அடியில் பலகையால் இருப்பிடம் அமைத்து தமது பிள்ளைகள் அதற்குள் உறங்கி எழும்பு  மட்டும்  தாய்யும், தந்தையும் வெளியில் இரண்டு பிளாஸ்டிக் கதிரையில் இருந்து கொண்டு பத்து மணித்தியாலயம் விழித்திருக்கின்றாா்கள். . ் இதற்காகவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச  கொழும்பில் உள்ள கொரியா போன்ற  முடுக்கு வீடுகளை அகற்றி தொடா்மாடி வீடுகளை அமைத்து அழகானதொரு கொழும்பை ஆசியா நாட்டில் உருவாக்க சில முயற்சிகளை எடுத்து வருகின்றாா்.

.தெகிவளை-கல்கிசை வாழும் முஸ்லிம்கள் மிகவும் ஒழுக்கமாணவா்கள். இங்கு வந்திருப்பவா்கள் ஒழுக்கமாகவும் அமர்ந்திருக்கின்றீா்கள் நீங்கள் சிகரட் புகைப்பதுஇல்லை. மது அருந்துவதில்லை உங்களது தொழிலும் உங்களது வியாபாரம் தங்களது பிள்ளைகளை கற்பிப்பதிலும் ஈடுபடுகின்றீா்கள் ஆனால் எனது  சமுகம் அவ்வாறு இல்லை. உடை, உணவு . குடி   போன்ற மாறுபட்ட கலாச்சாரத்தினை கொண்டவா்கள்.  இங்கு வாழும் நீங்கள் கூடுதலோனோா்  கிழக்கில் இருந்து வந்து  குடியிருப்பவா்கள். தொழில் ரீதியாக. களுபோவில வைத்தியசாலையில் முஸ்லிம் வைத்தியா்கள் கனிசமானவா்கள்  உள்ளனா். , கணக்காளா் ,சட்டத்தரணிக்ள என பல  அரச தொழில் செய்பவா்கள்  இப்பிரதேசத்தில்நிரந்தரமாகவும் வாக்காளா்களாகவும்  உள்ளீா்கள். ..   உங்களால்   எமக்கு எவ்விதமான பிரச்சினையுமில்லை . சிங்களவா்கள் தமது வீட்டை விற்கும்போது கூடுதல் விலை சொல்லுவாா்கள். ஆனால் அதனை இன்னொரு சிங்களவா் அந்த விலை கொடுத்து  வீட்டையோ காணியையோ வாங்க மாட்டா்கள் ஆனால் முஸ்லிம்கள் நியாயமான  விலை கொடுத்து அந்த வீட்டினை வாங்குவாா்கள்.  அவ் நிலத்தினை பண்படுத்தி சீராக அழகாக வீடு கட்டி அடக்கமாக வாழ்பவா்கள்.  தெகிவளையில் 85 பண்சாலை உள்ளது. ஆனால் 5 முறையும் தொழும் உங்களுக்கு பள்ளிவாசல் முக்கியம். கொகுவளையில் வாழ்பவா் எவ்வாறு களுபோவிலை துாரம்  பள்ளிக்குச் செல்லுவது. ?  நீங்கள் நேர்த்தியாக மாா்க்க கடமையை நிறைவேற்றுபவா்கள்.  ஆனால் மிகவும் கடும்போக்கான மதவாதம் கூடாது. எமது மதகுருமாா்களும். மதவாதம் கடும்போக்குவாதிகள் உள்ளனா். தற்பொழுது கோட்டாபாய ராஜபக்ச  ஜனாதிபதி பொறுப்பை எடுத்த பின்பு சகல பெளாத்த இயக்கங்கையும் கலையுமாறு கோரிக்கை விடுத்தாா். அவா்களாகவே முன்வந்து ஊடக மாநாடு வைத்து இயக்கங்கள் கலைத்தாக சொல்லிவிட்டாா்கள். எனக் தனசிரி அமரதுங்க  கூறினாா்


2 கருத்துரைகள்:

ஓஹோ, அப்படியானால், அவர்கள் இது வரை முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசியது உங்களுக்குக் கேட்கவில்லையா?

When the Janaza was burned against wishes of the Muslims, where were you all. please understand that you have to answer to Allaah on the judgement day for your ignorance on Janaza matter.

Post a comment