Header Ads



முஸ்லிம்களை ஜனாதிபதி பழிவாங்கினாரா..? ஹக்கீமுக்கு, அலிசப்ரி கண்டனம்


தேர்தல் காலத்தில் அரசாங்கம், ஜனாதிபதி மீதும் வெறுப்பை கக்குகின்ற அநாகரிக செயலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி கடும் கண்டனத்தை தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய உரையின் போது, ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காதவர்களை அடக்கி ஆளும் இறுமாப்போடு ஆளும் தரப்பு ஈடுபட்டு வருவதாகக் கூறியிருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.   ரவூப் ஹக்கீம் போன்ற முதிர்ச்சியான அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையூட்டும் விதத்தில் பேசுவது, அநாகரிகமான செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டாரா? எனக் கேட்கவிரும்புகின்றேன்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்த பின்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களையோ, ஏனைய சிறுபான்மை மக்களையோ பழிவாங்கும் மனப்பாங்கில் செயற்படவில்லை. எதிர்வரும் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவையே கோரி வருகின்றார். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தலைவரைப் பார்த்து குற்றவாளியாகக்காட்டும் ஒரு அநாகரிகமான அரசியலையே இவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.  

கொவிட் 19 தொற்று தாக்கத்தில் அனைவரையும் வேறுபாடு காட்டாமல் பாதுகாப்பதில் செயற்பட்டவர் ஜனாதிபதி. இக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன,மத பேதமின்றி அனைவருக்கும் ஐயாயிரம் ரூபா உதவித் தொகையை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுத்தது குற்றமா? எனக் கேட்டுவிரும்புகின்றேன்.  

தேர்தல் மேடைகளில் வெறுப்பு பிரசாரங்களைச் செய்து மக்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் மோசமான அரசியல் கலாசாரத்தையே ஹக்கீம் போன்றவர்கள் மேடையேற்றி வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரசாரங்களை ஏற்றுக் கொள்வதற்கு இனிமேலும் மக்கள் தயாராக இல்லை என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.எந்தவொரு சமூகத்தையும் அடக்கியாளும் எண்ணத்துடன் ஜனாதிபதியோ, அரசாங்கமோ செயற்படவில்லையென அலி சப்றி தெரிவித்தார்.  

எம்.ஏ.எம். நிலாம்  

7 comments:

  1. You have not mentioned about burning of Janaza on covid 19. This is generally muslims think getting revenge on them because Sri Lanka is the only country not allowed burial.

    ReplyDelete
  2. என்ன நடந்தாலும், ஒன்னும் nadakkavillaye என்பார்கள் சிலபேர்...

    ReplyDelete
  3. Everything said above is alright. But what has happened, atrocities made on burning COVID 19 Muslim victims? The only country in the world burning corvid's victims in Sri Lanka. Even one body burned that free from COVID 19. The government says without prove burning covid 17 victims can be buried whereas opposition against to it with proves. Muslim community does not want anything from the government but all our politicians want to sell poor Muslims rights for their benefits. The government or any independent group must survey the wealth of the Muslims politicians become MPs after 1990. Can anybody do some arrangements?

    ReplyDelete
  4. இவருக்கு சிங்கள இனவாதிகளிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் வாங்கியது இன்னும் காணாது போல..

    ReplyDelete
  5. பாவம் அலிஸப்ரி! அவர் இன்றே பிறந்த பாலகன். நேற்று நடந்தது ஒன்றும் அவறுக்கு தெரியாது.

    ReplyDelete
  6. ஜனாஸா எரிப்பதை உங்களால் தடை செய்ய முடியாவிட்டால், செய்ய முயற்சிப்பவர்களை விமர்ச்சிக்காதீர்கள்.   180 கோடி முஸ்லிம்கள்  ஒரே அணியில் இருக்கின்றனர்.

    ReplyDelete
  7. The many comments and concerns about the "COVID 19" burial/CREMATION issue concerning Muslims infected and deceased by "COVID 19", is very valid and many Muslim politicians and community leaders have up to now, not been able to reverse the conclusions made by the Presidentail Task Force on "COVID 19" and the DHS Anil Jayasinghe on the matter. Brother Attorney-at-Law Ali Sabri has clearly explained the extend of reachouts and a team of experts had made with those concerned and has specifically stated his stand both administratively and within the covenents of Islam and why he feels that - "If the medical authorities in Sri Lanka specifically insist that burial is detrimental to the "CONTAINING OF THE DISEASE/PANDEMIC IS THE ANSWER", falling in line is the only way at the moment, Insha Allah. It did NOT mean that he supported or suggested that stand. But the Muslims should definitely continue to ask "DUA" from God AllMighty Allah for this "REVERSAL" Insha Allah. DEFENITELY AT THE VERY EARLIEST PRESIDENT GOTABAYA RAJAPAKSA IN CONSULTATION WITH THOSE CONCERNED WILL MAKE THIS REVERSAL "INSHA ALLAH" WITH OUR PRAYERS AND DUA. If it happens, the Muslims should not think it is a election gymmick (a trick or device intended to attract attention or political publicity for the POTTUWA") Insha Allah or someone or other wrote an article about it. Let us accept it as a "BLESSINGS" of relief from God AllMighty Allah for our agonies and for being "PATIENT", Insha Allah.
    “The Muslim Voice” WARNED the Muslim Community of the CORRUPTION of our Muslim political leaders and now an article in the Tamil Mirror (Tamil webnewspaper) http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_144.html has proved that “THE MUSLIM VOICE” was correct (again) – Alhamdulillah. So now all the TRUTH of Muslim party leaders selling the Muslim vote bank for their personal gains that had been COVERED up and the Muslims who have been told a "LONG STORY" by these unscrupulous Muslim party leaders is becoming "PUBLIC" both in the print media and the digital social media/web domain. Not only the SLMC, but fingers can also be pointed at the other ...Congresses too. The time has come that
    these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. This is what "THE MUSLIM VOICE" is striving to do from the wilderness of the Muslim political arena, Insha Allah. Therefore "The Muslim Voice" is praying/crying through all its COMMENTS, that a New Muslim Political Culture has to be born soon and that is the Political message "The Muslim Voice" is trying to send out, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safe guard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. "The Muslim Voice" has begun to 'kindle" the political aspirations of the Sri Lanka Muslim Community in the right direction we hope, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.