Header Ads



மஹிந்தானந்தவுக்கு, மலிங்க காரமான பதிலடி


சர்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்தானந்த அளுத்கமகேயின் கருத்து தொடர்பில் இலங்கை அணியின் வீரரும் ஒருநாள், இருபது 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் கடந்த 2011 ஆண்டு  உலக கிண்ண கிரிகெட் தொடரில் விளையாடிய வீரருமான லசித் மலிங்க தனது கருத்தை முன்வைத்துள்ளார். 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள காணொளியொன்றை லசித் மலிங்க வெளியிட்டுள்ளா்.

அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியை நாங்கள் பணத்திற்காக விட்டுகொடுத்ததாக தெரிவித்துள்ள கருத்தினால், இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2011 ஆண்டின் உலக கிண்ண கிரிகெட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற வகையிலும், அந்தப் போட்டியில் பந்து வீச்சின் போது முதல் இரண்டு விக்கட்டுகளை எடுத்தவர் என்ற வகையிலும் இது குறித்து தெளிவுப்படுத்துவற்காக நான் காணொளி மூலம் உங்களிடம் வந்துள்ளேன்.

மிகவும் சாதாரணமான விடயம் ஒன்றுதான் உள்ளது, பணத்திற்காக விட்டுகொடுத்ததாக செல்கின்றார்கள். அது தொடர்பில் அனைத்து விடயங்களும் தெரியும் என்கின்றார்கள். அப்படியானால் நான் நினைக்கின்றேன், நாம் நாடு என்ற வகையில் மிகவும் அபகீர்த்திக்கு உள்ளான தருணம் இது.

 இந்த விடையம் குறித்த உண்மைநிலையை அறிய அதிக காலம் ஆகும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அந்த விடயத்தை புரிந்ததாக தெரிந்திருந்தாலும் செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை தேடுவதற்கு மிகஅதிக நாட்கள் தேவைப்படாது.

அதே போன்று மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மக்களை தவறான பாதையில் வழிநடத்தாது, மக்களுக்கு வெளிப்படையாக இவர்கள் தான் பணத்திற்காக போட்டியை விலை பேசியவர்கள் இவர்கள் தான் அதற்காக செயற்பட்டவர்கள் என்று தெளிவுபடுத்துவதற்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இப்படியான பொய்யர்களை மக்களாகவே நிராகரிப்பதற்கு, இதனால் இந்த கிரிக்கெட் அணியின் நன்மைக்காகவும் எதிர்காலத்தில் விளையாடவுள்ள வீரர்களுக்காகவும், அவர்களின் பெற்றோர்களுக்காகவும் இந்த விளையாட்டு தொடர்பில் பிழையான கண்ணோட்டத்தை  இல்லாமல் செய்வதற்கு அரசு என்ற வகையில், முன்னெடுக்க கூடிய அதிகூடிய சட்ட நடவடிக்கையை முன்னெடுத்து, போட்டி தொடர்பான ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் முற்படுத்தி இக் கிரிகெட் விளையாட்டில் உள்ள கறையை நீக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றேன்.

இவற்றுக்கு தீர்வு வழங்கக் கூடிய சட்டதிட்டங்கள் இல்லாத பட்சத்தில் புதிய சட்டதிருத்தங்களை சட்டங்களில் ஏற்படுத்தி இவ்வாறான செயல்களுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.