June 23, 2020

றிஷாட் பதியுதீனை கைதுசெய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள் - அமீர் அலி


-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

இனவாதத்தீயை கக்கி அரசியலை செய்து கொண்டிருக்கின்ற கோத்தபாய அரசாங்கம் தேர்தல் வெற்றிக்காக எப்போது எமது தலைவர் றிஷாட் பதியுதீனை கைது செய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி எல்லைக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் நான்கு தமிழ் உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவு செய்யப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸிற்கோ, முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விற்கோ வாக்களித்து ஆசனம் கிடைக்காமல் போனால் ஒன்று இல்லையென்றால் பூச்சியம். ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு வாக்களித்தால் ஒன்று இரண்டாகும் என்ற மிகச்சிறந்த போர்மியூலாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியுடன்  கைகோர்க்குமாறு அனைத்து இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

கடந்த காலங்களில் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு வாக்களித்த அத்தனை இளைஞர்களும் தற்பொழுது இலாப நட்டக்கணக்குகளை மனதில் கை வைத்து பார்க்க வேண்டும. கடந்த காலத்தில் உங்களுடைய கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டதா? உங்களுடைய வீதிகளும் பாடசாலைகளும் அபிவிருத்தி அடைந்ததா? விளையாட்டுக் கழகங்கள் முன்னேற்றம் அடைந்ததா? உங்களுடைய தலைமைத்துவம் பாராளுமன்றத்தில் காணி, கல்வி விடயங்களிலும் மஹிந்தானந்த அளுத்கமகே போன்ற பெரும்பான்மை சமுக அரசியல்வாதிகள் பாராளுமன்ற மேசைகளில் ஏறி நின்று பேசாதே என்ற போது மே பபா ஹ{கும் ஹரியன்னே என தைரியமாக பேசியவற்றை எல்லாம் கணக்கிட்டு பார்க்க வேண்டும்;.

முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இடம்பெற்ற பர்மா இந்தியா போன்ற நாடுகளிலேயே முஸ்லிம் ஜனாஷாக்களை புதைக்க அனுமதி வழங்கியிருந்த போதும் இந்த நாட்டில் எரிக்கப்படுகின்ற அவல நிலை இருக்கும் போது அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என்று நமது சமூகம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதென்பது மிகவும் வேதனையான விடயம். ஒருவேளை எதிர்வருகின்ற பாராளுமன்றத்தில் 151 கைகள் அறைமணி நேரத்தில் உயர்த்தப்பட்டால் முஸ்லிம் தனியார் சட்டம் பறிபோகின்ற நிலை வரும் போது குறைந்தளவு பாதிப்புடனாவது இந்த சமூகத்தை பாதுகாக்க ஆளுமையும் அனுபவமும் கொண்ட நல்ல அரசியல் தலைவர்களை இளைஞர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

இனவாதத்தீயை கக்கி அரசியலை செய்து கொண்டிருக்கின்ற கோத்தபாய அரசாங்கம் தேர்தல் வெற்றிக்காக எப்போது எமது தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள் என்ற அச்சத்தில் இருந்து கொண்டிருக்கின்ற இந்த கடுமையான சூழ்நிலையை உணர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கின்ற மிகப்பெரிய போராட்டத்திற்கு பதில் அளிக்கின்ற தேர்தலாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

இளைஞர்கள் எனக்கு என்ன கிடைத்தது என்பதை சிந்திப்பதை விட எமக்கு என்ன கிடைத்தது என்பதை அதிகம் சிந்தனை செய்ய வேண்டும் என்பதையும், இம்முறை அனைத்து கழகங்களும் உளசுத்தியோடு அமீர்அலி என்பவரை என்ன காரணங்களுக்காக ஆதரிக்கின்றோம் என்பதை பகிரங்கப்படுத்தி ஹலாலான முறையில் உங்களின் அன்றாட நடவடிக்கைகளோடு குறைந்தது இரண்டு நிமிடமாவது கல்குடாவின் பிரதிநித்துவத்தை பாதுகாத்து கொள்ள எதிர்த்தரப்பு அரசியல் முகாம்களில் உள்ள சகோதரர்களையும் கல்குடாவை பாதுகாப்பதற்காக அழைப்பு விடுக்குமாறும்  ஒன்றுபடுமாறும்  கோரிக்கை விடுக்கின்றேன்.

பொறுப்பு மிக்க கல்குடாவின் குடிமகன் என்ற ரீதியில் ஒவ்வொருவரும் ஐந்து வருடத்திற்கான சத்தியத்தை பாதுகாக்க இருக்கின்ற நாற்பது நாட்களையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றார்.

1 கருத்துரைகள்:

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாடிய ரிஷாத் பதியுதீன்,அமீர் அலி யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

Post a comment