Header Ads



பேக்கரி ஒன்றில் முஸ்லிம், சகோதரிக்கு ஏற்பட்ட அனுபவம்


அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த படி முகத்தை மறைத்திருந்த இளம் பெண், முகக்கவசம் அணியாததால், அவருக்கு பேக்கரி ஊழியர் தேவையான பொருளை கொடுக்க மறுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பறப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாட்டின் Minneapolis-ல் இருக்கும் பேக்கரில் ஒன்றி இஸ்லாமிய பெண்ணான Zahur Abdiaziz என்பவர் தனக்கு தேவையான பொருளை வாங்க சென்ற போது, கொரோனா வகை இனவெறிக்கு ஆளனதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஹிஜாப் அணிந்திருக்கும் இவரிடம் அங்கிருந்த ஊழியர், நீங்கள் முகக்கவசம் அணியவில்லை, என்னால் எதுவும் தர முடியாது என்று கூறுகிறார். குறித்த பெண்ணோ, இது தான் என்னுடைய முகக்கவசம் என்று கூறுகிறார்.

அதற்கு அவர் முகக்கவசம் இல்லை என்றால், சர்வீஸ் கிடையாது என்று தெரிவிக்கிறார். அதன் பின் அந்த பெண் இதை நீங்கள் முகக்கவசமாக நினைக்கவில்லையா என்ற போது, அவர் இல்லை, பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள் என்று கூறுகிறார்.

மீண்டும் அந்த பெண், இது நான் அணிந்திருக்கும் முக்கவசம் என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண் ஊழியர் உங்களுடைய முகக்கவசமாக இருக்கட்டும், ஆனால் முகக்கவசம் இல்லாமல் வந்தால் கொடுக்க வேண்டாம் என்றும், நான் இந்த கடையின் உரிமையாளர் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

இதையடுத்து இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, குறித்த பேக்கரி நிர்வாகம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோருவதுடன், ஊழியரின் நடவடிக்கைகளால் வருத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த கடையில் எங்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எந்தவிதமான பாகுபாடுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் Minneapolis-ல் எந்த ஒரு கடைகளில் ஷாப்பிங் செய்ய சென்றால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

5 comments:

  1. According to the above write up, I don’t see any racism here. The sales lady simply following the law and refusing to serve the customer without the mask. The issue here is the customer wants the niquab to be considered as mask which the sales lady doesn’t agree. Also she is advising the customer to be safe by wearing a real mask. Where is racism here?

    ReplyDelete
  2. Allah ha made the situation changed.

    Now the people who opposed hijaab asking muslim women to cover the face...

    Allahamdulillah.....Allah is great.

    ReplyDelete
  3. The things is this. Most people do not understand the difference between the mask and the hijab (face cover). Rather than making some issues, concerned people must adjust the situation in order to clear environment. Even in some Islamic countries, the same situation prevails.

    ReplyDelete
  4. நிகாப் அல்லது முகக் கவசம், வைரசிலிருந்து மனிதர்கள் பாதுகாப்பு பெறுவதற்காக என்ற காரணத்தைக் கொண்டிருக்கலாம்.  இது சட ரீதியானது.

    இதர சந்தர்ப்பங்களில்  'இன்முகம்' காட்டுவது, புன்முறுவல் பூப்பது மனிதர்களுக்கிடையில் உள்ள வெறுப்புகளை அகற்றி, அன்பையும், புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கக் கூடிய சாதனமாகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.  இது தார்மீகமானது.  வைரஸ் போன்று எல்லா மக்களையும் முகங்கொள்வது தவறு.

    வைரஸ் எண்ணம் கொண்ட ஒரு சிலரின்  தீய பார்வையில் இருந்து நம்மைப் பாதுகாக்க அதி பொருத்தமான கவசம் நமது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல் ஆகும்.  இது ஆத்மார்த்தமானது.  இது இரு பாலினர்க்கும் பொருந்தும்.

    ReplyDelete
  5. there are different kinds of masks used by people. however if the cover covers the objective of the mask, it can be considered as mask no?

    ReplyDelete

Powered by Blogger.