Header Ads



ரணில் - சஜித் முறுகல், சாதகமாக பயன்படுத்த மொட்டு அணி வியூகம்


ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பனிப்போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கு சாதனமான அரசியல் நகர்வுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாகவும், அதற்கான திட்டங்களை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வகுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்குமு் இடையிலான பனிப்போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளை கைப்பற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அதிலும் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களை குறித்து காய்நகர்த்தல்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் அணிக்கு சென்றிருப்போரை தங்களுடைய பக்கத்திற்கு இழுக்கும் செயற்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருகின்றது. இதனையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதற்காக முக்கியமான மேடைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்றி ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.