Header Ads



பேருவளைத் தொகுதியை பொதுஜன பெரமுன வென்றெடுக்க, முஸ்லிம்கள் உதவ வேண்டும் - மர்ஜான் பளீல் ஹாஜியார்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானது. அதுபோன்று பேருவளை முஸ்லிம்களுக்கும் பிரதானமானது என பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினரான மர்ஜான் பளீல் ஹாஜியார் தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் குறிப்பிட்டதாவது,

எனது தந்தை MSM பளீல் ஹாஜியார் மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் வழியில் அரசியல் பணிகளை முன்னெடுத்தவர். நானும் அவ்வழியே செண்கிறேன். பெரும்பான்மை பௌத்தசிங்கள சமூகத்தை பகைத்துக்கொண்டு நாம் செயற்பட முடியாது.

இதனையே அன்றைய முஸ்லிம் தலைவர்கள் எமக்கு கற்றுத் தந்தனர். தற்போது நாட்டு மக்களில் பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர். முஸ்லிம்களும் அவ்வழி செல்வதே சிறந்தது. 

பிரதேசங்களுக்கான அபிவிருத்திப் பணிகள், முஸ்லிம் நாடுகளுடனான சிநேக உறவுகள், புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்குகிழக்கு முஸ்லிம்களை நிம்மதியாக வாழச் செய்தமை உள்ளிட்ட பல வரலாற்று சேவைகளை ராஜபக்ஸ குடும்பம் செய்துள்ளதை நாம் மறக்க முடியாது.

பேருவளைத் தொகுதிகூட சுதந்திரக் கட்சியின் காலங்களிலேயே அதிகளவு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கல்வியமைச்சர் றிச்சர்ட் பத்திண மூலம் கல்வித்துறையில் நிறைய மாற்றங்களை நாம் பேருவளையில் ஏற்படுத்தியுள்ளோம். இது உதாரணம் மாத்திரமே ஆகும்.

இதுபோல இன்னும் பல உள்ளன. எதிர்காலங்களில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் மூலம் எமது பேருவளை அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியை பொதுஜன பெரமுன வென்றெடுக்க வேண்டும். 

அந்தவகையில் நாமும் ஆட்சியின் பங்காளர்களாகி பேருவளைத் தொகுதியை வென்றெடுக்க அணிதிரளுமாறு தான் பேருவளை மற்றும் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் மர்ஜான் பளீல் ஹாஜியார் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. "THE MUSLIM VOICE" fully endorses this statement made by Marjan Faleel, SLPP National List candidate. "The Mulsim Voice" wishes to reiterate what it has been propargating regarding Marjan Hajiar as a suitable Muslim politician who will follow his late father's political vision and idealogies once sent to parliament as a National List MP, Insha Allah. The Muslim vote bank in the Kalutara District/Beruwela/Aluthgama should "UNANIMOUSLY" decide to support Marjan Hajiar's humble and realistic request and cast their votes to the SLPP/"Sri Lanka Nidahas Podujana Sandanaya" at the upcoming General Elections, Insha Allah.
    HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community even belonging to the opposition parties should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. The Muslim Vote Bank has decided to act on it's own "NOW". Let President Gotabaya Rajapaksa "HELP" create that opportunity by "ASSURING" Marjan Hajiar a "SLOT" in the National List appointments of MP's to parliaments, which more than 300,000 Muslims who voted President Gotabaya Rajapaksa. at the last Presidential Elections will be happy and the nearly 550,000 Muslim voters who have already decided to vote the "POTTUWA" at the Augisut 2020 general elections, Insha Allah. 
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. உங்கள் கோரிக்கையை ஏற்று உதவக்கூடிய மனோபாவத்துடந்தான் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் குறிப்பாக பேருவளைத் தொகுதி முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.  அத்தகைய சிறந்த பரோபகாருண்யம் நிறைந்த ஆளுமை உங்களிடம் உள்ளது.  உங்கள் தகப்பனார் காலம் முதல் அன்னாருக்கும்  ராஜபக்ஸ குடும்பத்துக்கும் இடையில் உள்ள நல்ல  நற்புறவும் அரசியல் உறவும் கூட நம் மக்கள் நன்கு அறிந்ததே. 

    இந்த நல்லுறவை கெளரவிக்கும் பேரிலாவது, COVID-19 ஆல் இறக்கும் முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்யும் உரிமையைத் தராது, இறந்தவரது குடும்பத்தினரின் கவலை மீது எந்த அனுதாபமும் கொள்ளாது, வெந்த புண்ணில் வேல் குத்தியது போல கவலையின் உச்சத்துக்கே அவர்களைக் கொண்டு போய் இறந்த உடலை எரிக்கும் இந்த அரசாங்கத்தின் பிடிவாதம் உள்ளவரை, இவ்வாறான இனவாத சக்திகளைப் போசிக்கும் மனோபாவம் இருக்கும் வரை, இறுகப் பிணைந்த இஸ்லாமிய சகோதரத்துவத்தின் வாக்குகளையும், நீதியை நேசிப்போர்களின் வாக்குகளையும்  எதிர்பார்ப்பது கடினம்.

    ஆனால், இன்னும் காலம் தாழ்ந்துவிடவில்லை.  இந்தத் தேர்தல் காலத்திலாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறுபான்மையினரின் இவ்வித நியாயமான  உரிமைகளை அளித்துவிடுவது, பொதுஜன பெரமுனவின் இலகுவான வெற்றிக்கு நிச்சயம் துணை செய்யும்.

    ReplyDelete
  3. Dear Brother Mahibal M. Fassy,
    Your concerns about the "COVID 19" burial/CREMATION issue concerning Muslims infected and deceased by "COVID 19", is very valid and many Muslim politicians and community leaders have up to now, not been able to reverse the conclusions made by the Presidentail Task Force on "COVID 19" and the DHS Anil Jayasinghe on the matter. But the Muslims should definitely continue to ask "DUA" from God AllMighty Allah for this "REVERSAL" Insha Allah. DEFENITELY AT THE VERY EARLIEST PRESIDENT GOTABAYA RAJAPAKSA IN CONSULTATION WITH THOSE CONCERNED WILL MAKE THIS REVERSAL "INSHA ALLAH" WITH OUR PRAYERS AND DUA. If it happens, the Muslims should not think it is a election gymmick (a trick or device intended to attract attention or political publicity for the POTTUWA") Insha Allah. Let us accept it as a "BLESSINGS" of relief from God AllMighty Allah for our agonies and for being "PATIENCE", Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.