Header Ads



கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டவர், குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்


கொழும்பில் நேற்று தற்கொலைசெய்துகொண்ட நபர் பயன்படுத்திய துப்பாக்கி அவரிற்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட நபரிற்கு துப்பாக்கியை விற்ற நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் குறிப்பிட்ட துப்பாக்கியை 151,000 ரூபாய்க்கு வாங்கினார் என்பது குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.

சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் முகாமையாளர் ரஜீவ ஜெயவீர எழுதிய கடிதமொன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் அந்த கடிதம் மூலம் குறிப்பிட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் அந்த நபர் தனது தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் துப்பாக்கியை வாங்கியது குறித்தும் ஒரு தடவை பயன்படுத்தி பார்த்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் முகாமையாளரான ரஜீவஜெயவீர கொழும்பு டெலிகிராவிற்கு கட்டுரைகளை எழுதிவந்துள்ளார்.

கொழும்பு டெலிகிராபின் ஆசிரியர் உவிந்து குருகுலசூரியரஜீவ ஜெயவீரவின் மரணம் குறித்து எழுதியுள்ளார்.

அவர் எழுதிய மூன்று பக்க கடிதத்தை தான் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கொவிட் நிதியத்திற்கு அரைமில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளார்,தனது வேலையாளின் வங்கிக் கணக்கில் ஒரு மில்லியனை வைப்பு செய்துள்ளார் என தெரிவித்துள்ள உவிந்து சடலமாக மீட்கப்பட்டவர் 151.000 ரூபாய்க்கு துப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளார்,அதனை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமைக்காக கவலை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஜீவ டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார் எனினும் தற்போது அவரது டுவிட்டர் கணக்கு செயல் இழக்கச்செய்யப்பட்டுள்ளது, அது எப்போது இடம்பெற்றுள்ளது என்பது தெரியவரவில்லை

No comments

Powered by Blogger.