Header Ads



அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள, மக்கள் பலமான ஆணையினை வழங்க வேண்டும் - மஹிந்த

யுத்த காலத்தில் காணாமல்போனதாக குறிப்பிடுபவர்களை கண்டுப்பிடிப்பது காணாமல்போனார் அலுவலகத்தின் நோக்கமல்ல. மாறாக  யுத்தக் குற்றச்சாட்டுக்கு  உள்ளாக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக்கி  2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளதே ஆகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் தற்காலிகமாகவே தடைப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக  சர்வதேச மட்டத்திலும், உள்ளுர் மட்டத்திலும் சூழ்ச்சிகள் தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன. 

அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள மக்கள் பலமான ஆணையினை மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

1970 ம் ஆண்டு சோசலிச கொள்கையினையுடைவர்கள் அரசாங்கத்தை அமைத்தார்கள். இந்த அரசாங்கம் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் தலையீட்டினால் உருவாக்கப்பட்டது என்று எவரும் விமர்சிக்கவில்லை. அதேபோல் 1977ம் ஆண்டு முதலாளித்தவ கொள்கையினையுடையவர்கள் ஆட்சியமைத்தார்கள் எவரும் அமெரிக்கா, பிரித்தானியாவின் தலையீட்டினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது என குறிப்பிடவில்லை. ஆனால் 2015ம் ஆண்டு   வெளிநாடுகளின் தலையீட்டினாலும், அழுத்தங்களினாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று  சர்வதேச நாடுகள் ஏதும்  எதிர்பார்க்கவில்லை.

 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சர்வதேசத்தின் அழுத்தம் செல்வாக்கு செலுத்தியது.  அதனை நாட்டு மக்கள்    முழுமையாக தோற்கடித்தார்கள்.  2015ம் ஆண்டு  சர்வதேச தரப்பினரது  ஆதிக்கம் மீண்டும் தலைத்தூக்கியது. ஐக்கிய தேசிய கட்சியின்   தலைவர் ரணில் விக்ரமசிங்க     2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்  வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து    விலகி பொதுவேட்பாளரை களமிறக்கியமை   சர்வதே  நாடுகளின் தலையீட்டின் முதற்கட்ட செயற்பாடு.

  2015ம் ஆண்டு  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது  நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட்டதுடன், பல நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டார்கள். அத்துடன் பௌத்த மத தலைவர்கள்  பொய் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர்களுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டு அவர்களை கொடூரமானவர்களாக சர்வதேசத்தின் மத்தியில் காண்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டை  பிளவுப்படுத்த புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்   துரிதப்படுத்தப்பட்டன யுத்ததினால் பெற்றுக் கொள்ள முடியாததை அரசியல் ஊடாக பெற்றுக் கொள்ள  2015ம் ஆண்டு தொடக்கம்  பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2019ம் ஆண்டு  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால்  முன்னெடுக்கப்பட்ட முறையற்ற முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன இருப்பினும்  அரசாங்கத்துக்கு எதிராக உள்ளக மற்றும் சர்வதே மட்டத்தில் இன்றும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில்  புதிய அரசாங்கம்  ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்ட ஒரு சில நாட்களில்  சுவிஸ்லாந்து  தூதரக அதிகாரி கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் 2105ம் ஆண்டு தமக்கு ஆதரவு வழங்கிய சர்வதேச  நாடுகளை திருப்திப்படுத்தும் விதமாக ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  கொண்டு வந்த 30-1   பிரேரணைக்கு  இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தது. 30-1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பல நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனதால் அதனை மாறுப்பட்ட வழியில் நிறைவேற்ற  நல்லாட்சி அரசாங்கம் உரிய   சட்டங்களை இயற்றியுள்ளது.

இப்படி கூறிக்கொண்டே போகலாம். தற்போது அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  கருணா அம்மானின்க கருத்து,  கிரிக்கெட் போட்டியின் வெற்றி காட்டிக் கொடுப்பு ஆகியவற்றை குறிப்பிடலாம். ஆனால்  மக்கள்   உண்மையினையும் , தேவையானதையும் பிரித்து பார்க்க வேண்டும். கருணா அம்மான் விடுதலை புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை. ஆனால் 1989ம் ஆண்டு புலிகளுக்க ஆயுதம், பணம் வழங்கியதையும் தற்போதைய எதிர் தரப்பினர்  மறந்து விட்டார்கள். 2002ம் ஆண்டு  புலிகளுடன் ஒப்பந்தம் செய்து வடக்கு மற்றும் கிழக்கினை பிரபாகரனுக்க  வழங்கிய விடயம் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மான்  புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நல்லாட்சியில் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான முயற்சி இன்றும் தொடர்கிறது. ஆகவே அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சவால்களை வெற்றி கொள்ள மக்கள் பலமாக ஆணையினை மீண்டும் வழங்க வேண்டும். என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.

3 comments:

  1. dear ceylon people
    i request obdiently that donot vote follwing political party , please future suffering example (nrfc law in india, burma, china )
    1.podjana parmuna
    2.unp
    3.slfp
    thugs cheating people now acting like cinema

    ReplyDelete
  2. அந்த இரண்டு விதைகளையும் கேட்பது சுதந்திரமாக இயங்க அமைக்கப்பட்டுள்ள சுதந்திர ஆணைக்குழுக்களை உடனடியாகக் கலைத்து சனாதிபதியின் சர்வாதிகாரத்தைப் பலமடங்கு கூட்டி தனது சொந்த வீட்டுக்கு சொத்துக்கள் குவிப்பது தான் அவர்களின் அரசியலின் ஒரே இலக்கு என பல கோணங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது.

    ReplyDelete
  3. தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வரைவிலக்கணம் தந்தவர். 115 உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

Powered by Blogger.