Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கு வெளிநாட்டு நிதி உதவி, விசாரணை முடிந்தபின் மேலும் பலர் கைதுசெய்யப்படுவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவு நிதிகிடைத்தது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் எஸ்பி ஜாலிய சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக பெருமளவு பணம் வெளிநாட்டிலிருந்து தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்காக இலங்கையை சேர்ந்த குழுவிற்கு பணத்தை பறிமாற்றம் செய்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்ட உள்ளுர் வர்த்தகர்களும் நிதி உதவி வழங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலிற்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களிற்கும் தாக்குதலிற்கும் தொடர்பிருந்தமை உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் இறுதிகட்டத்தில் உள்ளன மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.