Header Ads



அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி, பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி நியமனம்

– எம்.ஜே.எம். சஜீத் –

அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது  பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை -10- தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் – 01ஐ சேர்ந்த  புண்ணிமூர்த்தி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியும் தற்போது மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக கடமையேற்றிருப்பவருமான எம்.ஐ. எம். நவாஸ். அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்துக்கு பொறுப்பான உப பீடாதிபதி யு.எல்.எம். புகாரி, கல்விக்கான உப பீடாதிபதி ஏ. பாறூக், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர் மற்றும் இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு புதிய பீடாதிபதி வரவேற்றனர்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் கல்விசாரா உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பணியாற்றிய பீடாதிபதி நவாஸ், மட்டக்களப்பு கல்விக் கல்லூரிக்கு பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, மட்டக்களப்பு கல்விக் கல்லூரிக்கு முன்பாக தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு கல்விக் கல்லூரிக்கு முஸ்லிம் ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டமையை எதிர்த்தே – இவ்வாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 comment:

  1. கல்வியியலாளர் திரு. புண்ணியமூர்த்தி அவரகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை அவரகள் பொன்னாகப் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை சிறப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு. அவரகள்மீது சில புதிய சவால்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இனத் துவேசத்திற்கு சாவுமணி அடித்தல். ஏனைய கல்விக் கல்லூரிகளுக்கு ஒப்பானதாக இந்தக் கல்லூரியை மாற்றியமைத்தல். திறமைமிக்க கல்வியாளரான திரு புண்ணியமூர்த்தி அவரகள் தமது புதிய பயணத்தையும் சமூகங்களின் எதிர்பார்ப்பையும் challenge களையும துணிவுடன் எதிர் கொள்வதற்கு இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete

Powered by Blogger.