Header Ads



99 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 99 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

ஊடக சந்திப்புகளை நடத்திய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், வேறு கட்சி சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோருக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

கொழும்பில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

மிக குறுகிய காலத்திற்குள் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை கூடிய விரைவில் கட்சியில் இணைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தலை முன்னிட்டு மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

குறிப்பாக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் பிரச்சார கூட்டங்களை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

1 comment:

  1. வீணாப் போன கட்சி செயலாளரும் கட்சித் தலைவரும் ஐதேகட்சியை இந்த நாட்டிலிருந்து இல்லாமல் ஒழிக்க பெரியதொரு டீலில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த அநியாயத்துக்கு அல்லாஹவைத்தவிர வேறு யாருக்கும் தண்டனை வழங்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.