Header Ads



பொதுஜன பெரமுன 134 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பெறும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத்தேர்தலில் 134 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பெறும் என்பதால், அந்த கட்சியுடன் இணைந்து தமது வேலைகளை செய்து கொள்வதா இல்லை கடந்த காலத்தில் போன்று துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அந்த கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளரான சட்டத்தரணி மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரங்களுக்கு அமைய பொதுஜன பெரமுனவுக்கு குறைந்தது 134 ஆசனங்கள் கிடைக்கும். அது சில நேரத்தில் 140 ஆகவும் மாறலாம். நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெறவே முயற்சித்து வருகின்றோம்.

நாங்கள் கடந்த முறை கோட்டாபய ராஜபக்சவுக்கு 68 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எனக் கூறிய போது சிரித்தனர். கணக்கிட்டு பார்க்கும் போது 68 லட்சம் 69 லட்சம் கிடைத்தது.

இதன் பின்னர் எப்படி இதனை அறிந்துக்கொண்டீர்கள் எனக்கேட்டனர். இது சாதாரண அறிவு.புள்ளிவிபரங்கள், மக்களின் இதயத்துடிப்பு, இவற்றை புரிந்துக்கொண்டால் தவறுவதற்கு வாய்ப்பில்லை.

பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும். அப்படியானால், அரசாங்கத்துடன் இணைந்து தமது வேலைகளை செய்துக்கொள்ள வேண்டுமா, இணைந்து இந்த பயணத்தை செல்வதா, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் இணைந்து நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு வலுசேர்ப்பதா, அப்படியில்லை என்றால், கடந்த காலத்தில் போன்று பிரிந்து, துன்பப்படுவதா, ஒன்றாக இணைந்து தற்காத்துகொள்வதா அல்லது பிரிந்து அழிந்து போவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. 'அங்க 134'  இலங்கையில் எதற்கு பிரபலம் என்பது சகலரும் அறிந்ததே.

    'ஜனாஸா எரிப்பு' விடயத்தில் இவர்கள் ஏற்கனவே தம்மைத் தாமே நிரூபித்தே இருக்கின்றனர்.

    இல்லாவிட்டால் இந்தத் தேர்தல் காலத்திலாவது நிச்சயம் இச்சட்டத்தை வாபஸ் பெற்றிருப்பார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.