Header Ads



இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு பாகிஸ்தானின் புலமைப்பரிசில்


(நா.தனுஜா)

இலங்கை - பாகிஸ்தான் உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு 5 வருடகாலத்திற்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலை வழங்கவிருப்பதாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இந்தப்புலமைப் பரிசில் ஊடாக இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் பொறியியல் விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலின் கீழ் மாணவர்களுக்கான வகுப்புக்கட்டணம், தங்குமிட கட்டணம், கற்கைக்கான கட்டணம் மற்றும் ஒருமுறை மாத்திரம் நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றன. இதனைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தகைய பின்னணியைக் கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், குறிப்பாகப் பெண்கள் இதற்கு விண்ணபிப்பது பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதில் தெரிவாகும் விண்ணப்பதாரிகள் பாகிஸ்தானின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமது உயர்கல்வியைத் தொடரமுடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முகமட் ஷாட் கட்டாக் இந்தப் புலமைப்பரிசில் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளித்தார். இச்சந்திப்பின் போது பரஸ்பர தகவல் பரிமாற்றத்தின் ஊடாக இலங்கை - பாகிஸ்தானுக்கு இடையில் காணப்படும் தீவிரவாதத்தடுப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுவாக்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. ALHAMDULILLAH, ALHAMDULILLH, ALHAMDULILLAH. This is a great support Pakistan and Prime Minister Imran Khan is offering to Prime Minister Mahinda Rajapaksa and President Gotabaya Rajapaksa to ease the demand for University entrance/education that many thousands of qualified AL students are bottled necked and suffering without a place in the higher educational institutions in Sri Lanka even though they are qualified. At a time when Sri Lanka is trying to bring about "CHANGES" in Social Justice, Economical Revival and create a better knowledgable Nation, this arrangement offered will be a strength of pillar to Sri Lanka, Insha Allah. I am sure that President Gotabaya Rajapaksa and PM Mahinda Rajapaksa will put in place a "FAIR and JUST SELECTION DUE PROCESS" for the selection of these students to be recommended for these scholarships irrespective of PARTY POLITICS, COMMUNAL AND RELIGIOUS BAIS and FREE fvrom any LOBBYING POWER, Insha Allah. "THE MUSLIM VOICE" wishes that 50% of the scholarships should be made available to the women of all communities represented, Insha Allah. "THE MUSLIM VOICE" wishes to express their since thanks and gratitude to PM Imran Khan, The people of Pakistan and the Governmsnt of Pakistan for this generoust offer made, Insha Allah. Pakistan has always remained a true friend of Sri Lanka since the independence of both our friendly Nations.
    A Special Note for the attention of PM Imran Khan and the Government of Pakistan - PAKISTAN SHOULD OFFER 1000 MILKING COWS (TROPICALIZED SHAIWAL BREED) TO SRI LANKA ON BILATERAL AID ASSISTANCE TO REVIVE AND DEVELOP THE RURAL DAIRY FARMING INDUSTRY OF SRI LANKA TO MAKE SRI LANKA SELF SUFFICIENT IN LOCAL MILK PRODUCTION. "THE MUSLIM VOICE" has been pushing Pakistan on this matter for many months and hope that Pakistan Authorities will give some positive response to this suggestion, Insha Allah. This will help former minister Basil Rajapaksa and President Mahinda Rajapaksa to implement development of local agriculture and animal husbandary, dairy farming and "RURAL ECONOMY as evisaged in the election manifest - "VISTAS OF PROSPERITY AND SPLENDER" in 2019 and now, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. எவ்வாறு இணைந்து கொள்ள முடியும் எனும் தகவல்கள் தாருங்கள்.

    ReplyDelete
  3. இந்த புலமைப் பரிசில்களில் எத்தனை முஸ்லிம்கள் பயனடையப் போகின்றனர். ஆனால் இலங்கை பாகிஸ்தான் மாணவர்களுக்கு இதுவரையில் எத்தனை புலமைப் பரிசில்களை வழங்கியிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.