Header Ads



ரணிலுக்கு 10 ஆசனங்களும், சஜித்திற்கு 20 ஆசனங்களுமே கிடைக்கும் - கண்டுபிடித்தார் வீரவன்ச

நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்கும். ரணில் அணி வெறும் 10 ஆசனங்கள் மட்டுமே பெறும். 

அதேவேளை, சஜித் அணி 20 ஆசனங்களுக்கு மேல் பெறவேமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எந்தக் கட்சியுடனும் போட்டியில்லை. தாமரை மொட்டு' அதிக ஆசனங்களுடன் - மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வரலாற்றுவெற்றியைப் பெறும்.

எதிர்க்கட்சிகள் எமது கட்சிக்கு எந்தவிதத்திலும் சவாலாக அமையாது. அந்தக் கட்சிகள் தங்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்றன. அரசுடனான 'டீல்' தொடர்பில் போட்டிக்கு ஏட்டியாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

'டீல்' செய்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை 'தாமரை மொட்டு'க்கு இல்லை. தனித்து நின்று ஆட்சியமைப்பதே எமது பிரதான நோக்கம். அது நிறைவேறியே தீரும் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. The man taking 30 sheets....

    ReplyDelete
  2. படைக்கும் சக்தியை மாத்திரம் அல்லாஹ் தன்னகத்தே வைத்துள்ளான். அதில் வேறு எவருக்கும் பங்கில்லை. கண்டு பிடிக்கும் சக்தியை மனிதர்களுக்குக் கொடுத்து அவரகளுக்கு உதவி செய்கின்றான். அதன் அடிப்படையில் (அவருடைய பெயர் என்னவென்று அதற்கிடையில் மறந்து விட்டேன் - விமல் வீரவங்ச அவரகளுக்கு கண்டுபிடிக்கும் சக்தியையை அல்லாஹ் மிதமாகவே வழங்கியுள்ளான் போலும். அதன் அடிப்படையில் எதிர்கால நாட்டு நடப்புகளை அறியும் சக்தியை அதாவது கொரணா வைரசினால் மரணிக்கும் பிரேதங்களை புதைப்பதனால் ஏற்படக்கூடிய அபரிமித தீமைகள் என்பனவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் கண்டு பிடித்த இந்த விஞ்ஞானி விமல் அவரகள்தான் எனபதில் நாம் பெருமை கொள்ளல் வேண்டும். தேர்தல் முடியட்டும். விமலின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.